Monday, 2 May 2016

காட்டில் ஒரு புலி

காட்டில் ஒரு புலி
சிகரெட்பிடித்துக்கொண்டுநின்றிர
ுந்தது.
அப்பொழுது அந்தவழியாகவந்த ஒரு எலி சொன்னது..
"சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட்பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்...
என்னுடன்வா, இந்த காடு எவ்வளவழகானதென்ற
ு காட்டுகிறேன்..."
அதை கேட்ட புலி,
சிகரெட்டை காலில்போட்டு நசுக்கிவிட்டு எலியுடன் நடந்தது...
சிறிதுதூரம்சென்றபொழுது ஒரு யானை உதட்டின் அடியில் 'ஹான்ஸ் ' வைத்துக்கொண்டிருந்தது.
எலி யானையிடம் கேட்டது
" சகோதரா நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்..
வா இந்த காடு எவ்வளவுசுந்தரமா
னதென்று காட்டுகிறேன்..."
இதை கேட்ட யானை ஹான்ஸையெல்லாம் எடுத்து எறிந்துவிட்டு எலியுடன் சென்றது....
அவ்வாறு மூன்றுபேரும் நடந்துபோகும்பொழுது
சிங்கமகாராஜா சாராயம் குடித்துக்கொண்டுநின்றது...
இதை கண்ட எலி சிங்கத்திடம் கேட்டது...
"மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக்கொள்கிறீர்கள்...
இந்த காட்டின் அழகினை இதுவரைகண்டதுண்டா... என்னுடன்வாருங்கள் அடியேன் நான் காட்டுகிறேன்..."
இதை கேட்ட சிங்கம்,
எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டது.
இதை கண்டு சப்தநாடியும் ஒடுங்கிப்போன புலியும் யானையும் சிங்கத்திடம் கேட்டன...
"மகாராஜாவே, தாங்கள் ஏன் இந்த சமாதானத்தூதுவனை அடித்தீர்கள்...?"
அப்பொழுது சிங்கம் சொல்லிச்சாம் ...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"இந்த பரதேசி கஞ்சா அடிச்சிட்டு இதையே தான் சொல்லி
நேத்து என்னைய இந்த காடுபூராவும் நடக்கவெச்சான்...
டெய்லி இவனுக்கு இதான் வேலையே..."

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.