மற்றவர்களிடம் இனிமையாக நடக்கும் மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே கடுமையாக இருப்பது எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அவர்களால் அப்படித்தான் இருக்க முடியும்.
நஷ்டத்தை ஈடுகட்டும் இயற்கைச் சட்டம் அது.
நீங்கள் மற்றவர்களுக்கு இனியவராக இருந்தால், உங்களுக்கு நீங்கள் கடுமையாகவே இருப்பீர்கள்.
நீங்கள் நிஜமாகவே மற்றவர்களிடமும் கடுமையாகவே நடந்து கொள்ள விரும்புகிறீர்கள்.
ஆனால், அதை மறைத்துக் கொள்கிறீர்கள். உள்ளே அமுக்கி வைத்து விடுகிறீர்கள்.
அது உங்களுக்குள் பெருகி அதிகரித்து விடுகிறது.
நீங்கள் மற்றவர்களிடம் கடுமையாக நடக்க முடியாது.மற்றவர்களிடம் கடுமை காட்டக் கூடாது என்று உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கடைசியாக நீங்கள் குப்பைகளை எங்கே கொட்ட முடியும்.....???
அதற்கு ஏற்ற இடமாக நீங்கள் மட்டுமே மிச்சம் இருக்கிறீர்கள்.
நீங்கள் பிறரிடம் இனியவராகவும் இருக்க வேண்டாம்.
உங்களிடம் கடுமையாகவும் இருக்க வேண்டாம்.
இது எனது போதனையாகும்.
உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள்.
பிறரிடம் அன்பாக இருப்பது,தன்னிடம் கடுமை காட்டிக்கொள்வது என்பதெல்லாம் ஒரு பெரிய விஷயமே அல்ல.
உள்ளே நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
உங்களுக்கு நீங்களே முதலில் இனியவராக இருந்து பழக வேண்டும்.
சிக்கலான காரியம் அன்பாக இருப்பதாகும்.
தன்மீது அன்பு கொள்வதே சிக்கலை அவிழ்க்கும் முதல் வழியாகும்.
~~ஓஷோ~~
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.