பயத்திலிருந்து விடுதலை...
நம் எல்லாருக்குமே பயம் உள்ளது. வேலை போய்விடுமோ என்ற பயம், பணம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பயம், வெற்றி பெற மாட்டோமோ என்கிற பயம், சமூக அந்தஸ்தை இழந்துவிடுமோ என்கிற பயம், நோய்கள் குறித்த பயம், மரணம் குறித்த பயம் - இப்படிப் பல வகையான பயங்கள்.
ஆனால் உண்மையில் பயம் தோன்றுவதற்கான காரணம், நாம் ஒன்றை எதிர்கொள்ள விரும்பாததே. எனவேதான் தப்பித்தல், நியாயப்படுத்தல், கண்டனம் செய்தல், அடக்குதல் போன்ற ஏதோ ஒரு வழியில் பயத்தை எதிர்கொள்கிறோம்.
பயம் ஒருவரைப் பொய் சொல்ல வைக்கிறது. நேர்மையற்றவராக ஆக்குகிறது. குறுகிய நோக்குடையவராக ஆக்குகிறது. சிந்தனை வளமற்றவராக ஆக்குகிறது.
எனக்குப் பயமில்லை என்று காட்டிக் கொள்ள, தான் விரும்பியவற்றைச் செய்தவு அறிவுடைமை அல்ல. துணிச்சல் என்பது பயத்தின் எதிர்மறை அல்ல
பயம்
""""""""""
பயம் எங்கு நிலவுகிறது.
பயத்தைத் தூண்டக்கூடிய
செயல் நிகழும்
அக்கணத்தில்
நமக்கு
பயம் இருப்பதில்லை.
பயம்,
ஒருகாலும்
நிகழ்காலத்தியதல்ல;
செயல் நிகழும்
அக்கணத்திற்கு முன்போ
அல்லது பின்போ,
பயம் என்றால்,
அது பயமாகுமா?
பயத்தைத் தவிர்ப்பதோ
அதிலிருந்து தப்பிப்பதோ
இயலாத காரியம்.
உடல் ரீதியாகவோ
அல்லது
உளரீதியாகவோ,
ஆபத்தை எதிர்கொள்ளும்
அந்தக் குறிப்பிட்ட
கணத்தில்
நம் முழு கவனமும்
அந்நிகழ்வின் மீது
குவிகிறது.
முழு கவனம் இருக்கையில்,
பயம் இருப்பதில்லை.
கவனமின்மை,
பயத்தை
உருவாக்குகிறது.
யதார்த்தங்களைப்
புறக்கணிக்கும்போதும்,
நிஜத்திலிருந்து
விலகி ஓடும்போதும்,
பயம் எழுகிறது.
நிஜத்திலிருந்து
தப்பியோடும்
அந்த ஓட்டமே,
பயம்.
- ஜே.கிருஷ்ணமூர்த்தி.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.