Friday, 6 May 2016

அரச மரம்

அரச மரத்தை பற்றிய அரிய தகவல். யாருக்காவது தெரியுமா?
அடிமரத்திலிருந்து நுனி மரத்தை நோக்கிய செயல்பாடு
நுனி மரத்திலிருந்து அடி மரத்தை நோக்கிய செயல்பாடு
(இந்த ரகசியத்தை கண்டுபிடித்தவன் நானாக இருக்கலாம்)
1. ஏப்ரல் மாதம் அரச மரம் அடிமரத்திலிருந்து இலைகளை உதிர்த்து முழுதும் கொட்டி விடும். பிறகு வெறும் குச்சியாக உள்ள மரத்தில், மீண்டும் அடிமரத்திலிருந்து இலைகள் துளிர்விட துவங்கி, கடைசியாக நுனி மரத்தில் இலைகள் துளிர்விடும். இந்த சமயம் கடும் வெப்பம் இருக்கும். மழையே பெய்யாத போதும் நன்றாக துளிர்விடும். இதன் பிறகுதான் சில இடங்களில் பரவலாக கோடை மழை துவங்கும் )
2. அடுத்து பருவ மழை காலத்தில் இதன் செயல்பாடு தலை கீழாக இருக்கும். அதாவது, மரம் முழுவதும் இலைகள் இருக்கும்போதே, நுனி மரத்திலிருந்து இலைகள் கொட்ட துவங்கும். மரம் முழுவதும் உள்ள இலைகள் கொட்டாமலேயே, இலைகள் கொட்ட, கொட்ட நுனியிலிருந்து அடி மரம் நோக்கி இலைகள் துளிர்விட துவங்கும்.
3. மழை பெய்வதற்கு முன்பு அரச மரத்தின் இலைகள் கவிழ்ந்து மழை வரும் அறிகுறியை தெரிவிக்கும். - இயற்கை ஆய்வாளர் மழைராஜு, பெரம்பலூர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.