Thursday, 26 May 2016

சித்தர்கள் வகுத்த அறிவியல்-

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் தமிழ்மொழி – சித்தர்கள் வகுத்த அறிவியல்-ஆச்சரியமூட்டும் உண்மை

தமிழ்ச் சித்தர்கள் வகுத்த உயிரெழுத்து ஓகம்.
‘தமிழ்’ மெய்யியல் மட்டுமல்ல அறிவியலும் ஆகும்!

தமிழ் உயிரெழுத்துக்கள் (நெடில்) ஏழு . இந்த உயிர் எழுத்துக்கள் உடலில் எங்கிருந்து தோன்றி

இயங்குகிறது என்பதை சித்தர்கள் கணித்துள்ளனர். ஆ முதல் ஒள வரை உள்ள ஓசைகள் உடலின் முக்கிய ஏழு நரம்பு மண் டலங்களை இயக்கவல்லது. இந்த ஏழு நரம்பு மண்டலங்களை சக்கரங்கள் என்றும் கூறுவர். இவ் வோசைகளை நாம் ஒலிக்கும் போது இந்த சக்கரங்கள் சுழல்கி றது. உயிர் ஒலியாகப்பட்டது காற்றின் மூலமாக இந்த சக்கரங்களை இயக்குகிறது. இவைகள் இசையாகவும் பரிமானம் பெறுகிறது . ஏழிசையும் இங்கிருந்தே பிறக்கி றது .

தாளமும் பண்ணும் சேர்ந்தது தான் இசை. இந்த இசை இயற் கையில் உள்ளது. நம் உடலிலு ம் உள்ளது. நம் உடலில் எங்கி ருந்து இது பிறக்கிறது என்பதை அறிந்த சித்தர்கள் , அந்த இயற்கை இசையின் ஊடாக தமிழ் உயிர் எழுத்துக்களை உலகிற்கு அறிமுக ப்படுத்தினர் . ஆதலினாலே தமிழே உலகின் முதல் மொழியாகவும் ஆயிற்று.

சரி இந்த உயிரெழுத்து ஓகம் என்பது என்ன ?

ஓகம் என்றால் தமிழில் கூடுதல் என்று பொருள் . இந் த சொல்தான் வடமொழியில் யோகம் என்று மருவிய து. உயிரும் மெய்யும் கூடும் கலைக்கே ஓகம் என்று பொருள். உடலும் மெய்யும் சேர்ந்தே இருந்தாலு ம் உயிரை தனியே நாம் உணர முடியாது. உயிருக்கும் உடலுக்கும் இருக்கும் தொ டர்பை இந்த உயிரெழுத்து ஓகக் கலையின் மூலமாக நாம் அறியலாம் .அவ்வாறு நாம் அறியும்போது உயிரை யும் உடலையும் பாதுகாக்கு ம் உத்தியை நாம் தெரிந்து கொள்ளலாம் . அதற்காகத் தான் இந்த ஓகத்தை சித்தர் கள் வகுத்தனர் . தினமும் காலை மாலையில் நாம் இந்த ஒகத்தைசெய்து பழகி வந்தால், நம் உடலும் உயிரு ம் புத்துணர்வு பெறுவதை அறியலாம். இதை செய்வது வெகு எளிமை

மேலே உள்ள‍ படத்தில் உள்ளது போல , மேலிருந்து கீழாக நாம் உயிரோசையை எழுப்ப வேண்டும். முதலில் ‘ஆ’ என்ற ஓசை யை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் இழுத்து ஒலிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஆ என்பதை ஆ ..ஆ.. ஆ ..ஆ ..ஆ ..ஆ ..ஆ…. என்று சுமார் 20 – 30 நொடிகள் வரை நாம் இழுக்கலாம் . அப்போது நம் மண்டையின் மேல் நடுப்பகுதி இய ங்குவதை நாம் அறியலாம். இந்த இடத்தில் தான் அகரத்தின் ஓசை செயல்படுகிறது. இதுவே உடலின் முதல் பகுதியுமாகும். பின்பு ‘ஈ’ என்ற ஓசையை எவ்வளவு நீடித்து ஒலிக்க முடியுமோ அவ்வளவு நீளம் ஒலிக்க வேண்டு ம். இது நம் மூக்கு, நெற்றிப்பகுதியி ல் உள்ள தசைக ளை , நரம்புகளை இயக்குவதை அறியலாம் . அடுத்து ‘ஊ ‘ என்ற ஒலி. இது நம் தொண்டை பகுதியை இயக்கும். இவ்வாறு இந்த உயிர் எழுத்துக்களின் ஏழு ஓசைக ளை ஒலிப்பதின் மூலமாக உடலின் ஏழு சக்கரங்களையும் நாம் இயக்கலாம். இப்படி நாம் முறையாக நீட்டித்து உயிர் எழுத்து க்களை உச்சரிக்கும் பயிற்சிக்கு உயிரெழுத்து ஓகம் என்று பெயர் .

இது சித்தர்கள் உலகிற்கு கொடுத்த மிகத்தொன்மையான ஓகப் பயிற்சி யாகும். நாம் தினமும் காலை மாலை உடற்பயிற்சி முடிந்தவுடன் இந்த உயிர் வளர்க் கலையை பயின்று வந்தா ல், நம் உடலும் உயிரும் புத்துணர்வுபெரும். நம் உடலில் உள்ள உயிர் ஆற் றல் சிறப்பாக செய ல்படத் தொடங்கும். எப்போதும் நாம் புத்துணர்வுடன் இருப்பதைஉணரலாம். இதை உலகிற்கு கொடுத்த சித்தர்களுக்கும் நாம் நன்றி பகிர்வோம் .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.