Wednesday, 25 May 2016

தாயாரின் பெருமை

🌻தாயாரின் பெருமை🌻

🌹தாயாரின் பெருமை,
கயா சென்று ஸ்ரார்த்தம் பண்ணும்போது நமக்குத் தெரியும்.

🌹பல்குனி நதிக்கரையில் 64 பிண்டங்கள் வைக்கும் போது 16 பிண்டங்கள் தாயாருக்காக மட்டும் வைக்கப்படுகின்றன.

🌹நம்மை கர்ப்பத்தில் சுமந்தபோது, பின்னர் ஒருவரை ஆளாக்க, தாயார் பட்ட கஷ்டங்களை இந்த ஷோடஸி மந்திரங்கள் மூலம் கேட்கும்போது கண்ணில் நீர் வராதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.

🍒அந்த மந்திரங்களையும் அதன்அர்த்தங்களையும்.
பார்ப்போம்🍒

1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்தமநி!
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!!

🌹என்னைக் கர்ப்பத்தில் தாங்கியபடி, மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது என் தாய் வேதனைகளை அனுபவித்தாளே, அதனால் எனக்கு விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா!தஸ்ய நிஷ்க்ர மணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!!

🌹ஒவ்வொரு மாதத்திலும், பிரசவத்தின் போதும் என் தாய்க்கு என்னால் ஏற்பட்ட வேதனைகளை உண்டாக்கிய வேதனை எனக்குச் சேர்ந்த பாவமூட்டைக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா பரிவேதநம்!
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!!

🌹என் தாயின் வயிற்றில் நான் கால்களால் உதைத்து உண்டாக்கிய வேதனை எனக்குச் சேர்த்த பாவமூட்டைக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாதயந்தம் மாத்ருபீடம்!
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!!

🌹நிறை கர்ப்பிணியாக என் தாய் என்னைச் சுமந்த போது அவளுக்கு உண்டான வேதனைகள் எனக்குச் சேர்த்த பாவத்தைப் போக்க இப்பிண்டத்தைத் தருகின்றேன்.

5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம்!
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!!

🌹தாய் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட களைப்பு, மூர்ச்சை போன்றவற்றால் வந்த வேதனைகள் எனக்கு விளைவித்த பாவத்தைப் போக்க, பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.

6. பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச!
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!!

🌹என்னை வியாதிகள் தாக்காமல் இருக்க, கசப்பான மருந்துகளைச் சாப்பிட்டாளே என் தாய், அவளுக்கு நான் செய்த இந்தக் கொடுமை களினால் எனக்கு உண்டான பாவத்தைப் போக்க, பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந!
தஸ்ட நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் த்தாம்யஹம்!!

🌹நான் பிறந்த போது மூன்று நாட்கள் அன்ன - ஆகாரமின்றி ஜடராக்னியின் (பசி என்னும் பெரு நெருப்பு) வெம்மையில் என் தாய் நொந்தாளே, அவளுக்கு என்னால் ஏற்பட்ட இந்தக் கொடுமை எனக்கு விளைவித்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்த: ஸ்யாந்மாத்ரு கர்பட தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!

🌹இரவில் நான் என் தாயின் ஆடைகளை, மல மூத்திரத்தால் அசுத்தம் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன்.

9. க்ஷ&தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி!
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் த்தாம்யஹம்!!

🌹எனது பசி, தாகம் தீர்க்க (தனக்கு இல்லை யென்றாலும்) அவ்வப் போது உணவும் நீரும் தந்தாளே என் தாய், அவளை வருத்திய பாவத்தை நீக்கப் பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.

10. திவாராத்ரெள் ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம்!
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!!

🌹அல்லும் பகலும் என் தாயின் முலைப் பால் அருந்தும் போது அவளை நான் துன்புறுத்தினேனே, அதனால் விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன்.

11. மாகே மாஸி நிதாகே ச்சிரேத்யந்த து கிதா!
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!!

🌹மாக மாதத்தில் சிசிர ருதுவில் கோடையில் என்னைக் காக்கத்
தன் உடலை வருத்திக்க் கொண்டாளே என் தாய், அவளுக்கு நான் தந்த இந்தத் துன்பங் களால் விளைந்த பாபங்களைப் போக்கிக் கொள்ளப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!!

🌹மகன் நோய்வார்ப் பட்டானே என்று கவலையால் வாடி இருந்தாளே என் தாய், அவளுக்கு விளைவித்த அந்த மனத் துயருக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம்!
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!!

🌹யமலோகம் செல்லும் என் தாய் கோரமான வற்றை யெல்லாம் கடந்து செல்வதற்குத் துணை நிற்பதற்காக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம்!
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!!

🌹என் தாய்க்கு நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக, அறிவுசொல் புத்திரர்கள் அவர்களது தாய்க்குச் செய்வதை ஒப்ப, நானும் இப்பிண்டத்தைத் தருகின்றேன்.

15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக!
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!!

🌹நான் நன்கு வளர்வதற்காக, தனக்கு ஆகாரம் இல்லாமல்கூட கஷ்டப்பட்டாளே அந்தத் தாய்க்கு நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.

16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய!
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!!

🌹கர்ப்பத்திலும், சிசுவாக இருந்த போதும் மரண வேதனையை ஒத்த பல கஷ்டங்களை நான் என் தாய்க்குத் தந்தமைக்குப் பரிகாரமாக இந்த பிண்டத்தைத் தருகின்றேன்.

🙏🙏தாயே தெய்வம்🙏🙏

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.