*உணர்வு உணர்ச்சி பற்றிய புரிதல்*
*உணர்ச்சி*
மனதில் பற்றுடன் செயலாற்றும் நிலை. இன்பம் துன்பம் என எதுவானாலும் அதன் தீவிர (extreme) மன நிலைக்குச் செல்வது. இதனையே உணர்ச்சிவயப்படுதல் என்போம்.
Extreme மகிழ்ச்சிக்கு செல்லும் மனம் அதே அளவிற்கு துன்பத்தையும் அனுபவிக்க நேரும்.
ஆறு தீய குணங்களான பேராசை, சினம், கடும்பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை, முறையற்ற பால் கவர்ச்சி மற்றும் வஞ்சம் போன்றவை மனம் உணர்ச்சி நிலையில் இயங்கும் போதே எழுச்சி பெறுகின்றன.
மேலும் நமது கர்மாவும் (விதி) உணர்ச்சி என்ற மன நிலையில் தான் செயலாகின்றன.
*உணர்வு*
இன்ப துன்பங்கள் நேரும் போது இதுவும் கடந்து போகும் என்ற மனநிலையில் (balanced mind state) எடுத்துக் கொண்டு
ஒவ்வொரு செயலையும் உணர்ந்து விருப்பு வெறுப்பின்றி நிதானமாகச் செய்வது.
இவ்வாறு இயங்கும் போதே நாம் நிகழ்காலத்தில் இருக்க முடியும்.
இறந்த மற்றும் எதிர்காலங்களே மனதால் தோற்றுவிக்கப்படுபவை.
நிகழ்காலம் என்பது ஒரு இருப்பு நிலை- எப்போதும் இருப்பது - அழிவில்லாதது - அதுவே ஆன்மாவின் நிலை. ஆன்மாவிற்கு அழிவில்லை.
இந்த நிலையை வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் உணர்வுப்பூர்வமாக அணுகி விழிப்புணர்வுடன் வாழும் போதே (ஆத்ம உணர்வை) உணர முடியும்.
இவ்வாறு செயல்படும் போது மனம் அமைதி மற்றும் பேரின்ப நிலைக்குச் செல்லும்.
இது கடந்து போகாத என்றும் இருக்கும் நிலை. உண்மை நிலை. இந்த நிலையில் மட்டுமே மனம் நிறைவாகவும் மகிழ்வாகவும் இருக்கும்!
அன்பும் கருணையும் பொங்கும்!
மனதை உணர்வு நிலையிலேயே வைத்திருக்க தியானம் மிகவும் உதவும்!
இத்தகைய மனநிலையில் இயங்கினால் மட்டுமே மதியால் விதியை வெல்ல முடியும்!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.