Wednesday, 11 May 2016

மனமற்ற நிலை

உங்கள் தியானத்தை மனதால் புரிந்து கொள்ள முடியாது
மனம் இல்லாமல் போவதற்கு மனமே உதவ முடியும்
மனம் இல்லாமல் போகும் போது வெறும் உணர்வு நிலை மட்டுமே மிஞ்சும்
மனம் என்பது கிடையாது மன ஓட்டம் தான் உண்டு
மனதால் எதையும் கவனிக்க முடியாது அதனால் நினைத்துப் பார்க்கத் தான் முடியும்
உங்கள் மனதால் எது நல்லது எது கெட்டது என்று அறிய முடியாது
மனம் என்பது எண்ணங்களால் நிரப்பப் பட்டுள்ள ஒரு வெற்றிடம் தான்
ஆழமான அன்பில் மனம் நின்று விடுகிறது
நீ உன்னுடைய மனதின் மூலமாகவே இந்த உலகத்தைப் பார்க்கிறாய்
மனமற்ற நிலையே பைரவரின் நிலை
நீ தனியாக இருக்கும் போது கூட
உன்னுடைய மனதில் ஒரு கூட்டத்தோடு தான் இருக்கிறாய்
நீ உன்னுடைய மூச்சை ஒரு கணம் நிறுத்தினால்
திடீரென்று உன் மனமும் நின்று விடும்
இசையை ரசிப்பதற்கு மனம் தேவையில்லை
தியானத்தின் மூலம் உன்னுள் இருக்கும் மனமற்ற நிலையைத் தொடு
நீ மனதைக் கடந்து விட்டால் எல்லாம் ஒன்றுதான்
மனம் பேராசையின் அடிப்படையிலேயே இயங்கும்
மனம் எப்போதும் பயனைப் பற்றியே நினைத்து ஏங்கும்
மனம் என்பது உடலுக்கும் ஆன்மா வுக்கும் நீண்டு கிடக்கும் கயிறு போன்றது
மனம் பூரண ஓய்வு நிலையில் சலனமற்று
இருக்கும் போது கடவுட் தன்மை தானே உண்டாகும்
மனம் இயங்குவதை ஒரு சாட்சியாக நின்று பாருங்கள்
மனதிற்கு தான் வார்த்தைகள் தேவை
உள்ளத்திற்கு வார்த்தைகள் தேவை இல்லை
உங்கள் எண்ணங்களின் குவியல் தான் மனம்
மனம் செயல்படும் போது ஆணவம் பிறக்கிறது
மனமற்ற நிலையைத் தான் புத்தர் தூய மனம் என்கிறார்
ஓஷோ

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.