Saturday, 14 May 2016

வாழ்க்கை முள்ளா? மலரா?

வாழ்க்கை முள்ளா? மலரா?
ஒரு கிரேக்கப் பாதிரியார் தன் முதிர்ந்த வயதில், பாரதத்தில் இருக்கும் ஒரு யோகியைப் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க வந்தார். அவர் தேடிவந்த நேரம், யோகி கண்களை மூடி இருந்தார். அவர் முகத்தில் ஒரு பரவசம் ஒளிர்வதை பாதிரியார் கவனித்தார்.
யோகி கண்களைத் திறக்க காத்திருந்தார். யோகியே, 45 வருடங்களுக்குமேல் தேவாலயத்தில் சேவை செய்தவன் நான். வாழ்க்கையின் உண்மையான பொருளைத் தெரிந்துகொள்ள வந்தேன். யோகி கண்களை மூடி பரவசத்தை ஆழமாக அனுபவித்துச் சொன்னார். ‘வாழ்க்கை என்பது தென்றலில் மிதந்துச் செல்லும் மல்லிகையின் வாசம் போன்றது. ரசித்து அனுபவிக்க வேண்டியது’.
‘அப்படியா? இயேசுவே முள்முடி அணிந்து இருப்பதைப் பார். வாழ்க்கை என்பது சதா முள்ளைப்போல் குத்தித் துன்பம் தருவது என்றல்லவா எனக்குப் போதித்தவர் சொன்னார்?’ ‘ஒருவேளை உங்களுக்குப் போதித்தவரின் வாழ்க்கை அப்படிப்பட்டதாக இருக்கலாம்’ என்றார் யோகி.
இப்படி வேதனையை மட்டுமே அனுபவிக்கத் தெரிந்தவர்கள், வாழ்க்கையின் அற்புத வாசத்தைத் தவறவிட்டவர்கள். வேதனைகளில் இருந்து நீங்கள் விடுபடவேண்டும் என்றால், ஒரேவழிதான். ஒவ்வொரு செயலையும் முழுமையான விழிப்புணர்வுடன் செய்து வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களை நீங்களே உணர்வீர்கள். ஆனந்தத்தை ருசிப்பீர்கள்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.