Tuesday, 10 May 2016

வார்த்தைகளை கேட்கும் போது கவனமாயிருங்கள்

அழகிய வார்த்தைகளை கேட்கும் போது கவனமாயிருங்கள்
தத்துவார்த்தமான வாதங்களை கவனமாக கேளுங்கள்
எதுவெல்லாம் பொய் எனக் கண்டு கொள்ளும்போது
மெய்யென்பது இருப்பது அதாவது உணர்வற்ற இருப்பு நிலை
அது ஒரு எதார்த்தம், ஏற்கனவே இருப்பது
மெய்நிலை என்பது ஏற்கனவே இருந்து கொண்டே இருப்பது
இருப்பது என்பது ஒரு
மறுபிறப்பெடுப்பது
இன்னொரு முறை குழந்தையாகி விடுவது
புத்தியால் அறிந்ததை அழித்து விட
மெய்யைப் பொய்யென்றும்
பொய்யை மெய்யென்றும் உணரப்படும்
மனம் என்பது ஆசையன்றி வேறில்லை
மனம் மட்டும் இந்தக் கணத்தில் இருப்பதே இல்லை
அது கடந்த கால அனுபவங்களை அசை போட்டுக் கொண்டு இருக்கிறது
அல்லது எதிர் கால கற்பனையில் திளைக்கிறது
மனம் நிகழ் காலத்தில் இருப்பதே இல்லை
ஆனால் நிகழ் காலம்தான் உண்மையில் இருப்பது
நிகழ்காலம் உண்மையென உணர, மனம் அற்றுப்போய், முக்காலமும் உணரப்படும்
இருப்பின் தன்மையும் உணரப்படும்
அதுவே இயல்பான தன்னிலைக்கு வழிவகுக்கும்
இருப்பாகிய நித்தியத்தில் நிலைத்திருக்க வழிவகுக்கும்...!!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.