ஒரு பழைய கால கேள்வி பதில். 2
ஆதிசங்கரரின் கேள்வி பதில் மிகவும் ஆர்வமான வரவேற்பை பெறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஞானி இதெல்லாம் பற்றி யோசித்திருக்கிற
ார். அவரே கேள்வி கேட்டுக்கொண்டு அவரே பதிலையும் சொல்லியிருப்பதன் காரணம் என்ன தெரியுமா? நமக்கு பதில் சொல்லவே தெரியாது ஏனென்றால் சில கேள்விகளே நமக்கு இன்னமும் புரியாதே! மேலும் நமக்கு தான் யாரவது கேள்வி கேட்டாலே அங்கிருந்து அகன்று விடுவோமே பிறகு எப்படி பதிலை தெரிந்து கொள்வது என்று தெரிந்து வைத்துக்கொண்டு அவரே அருமையான தக்க பதிலையும் அளித்திருக்கிறார். இக் கேள்விகள் எந்த காலத்துக்கும் பொருந்துபவை என்பது தான் அதி விசேஷம். அடுத்த ட்வென்டி ட்வென்டி - இரண்டாவது பகுதியாக இதோ.
21. மட்டத்திலும் மட்டமானது எது?
மட்டமானவனிடம் எதையாவது நாடுகிறோமே அது.
22. எது உயர் ரக வாழ்க்கை?
கூடுமானவரை தவறு செய்யாத வாழ்க்கை.
23. எது அறியாமை?
எதையுமே உருப்படியாக தெரிந்துகொள்ளாதது.
24. எவன் விழித்துக்கொண்டிருப்பவன்?
ஞானி
25. எது துக்கமானது?
உலகில் வாழும் நம் அனைவரின் முட்டாள் தனம்.
26. நம் வாழ்வில் எது தாமரை இலைத் தண்ணீர்?
இளமை, செல்வம், ஜீவிதம்
27. சந்திர கிரணம் போன்று குளுமையாய் உதவுவோர் யார்?
நல்லவர்கள்.
28. எது நரகம்?
சுதந்திரமாக செயல் பட முடியாமல் மற்றவர் பிடியில் இருப்பது.
29. திருப்தியானது என்று எதைச் சொல்கிறோம்?
எல்லா பற்றையும் உதறிவிடுவதை.
30. எதை அடையவேண்டும்?
எல்லாருக்கும் நன்மை செய்வதை.
31. சகல உயிர்களுக்கும் உன்னதமானது எது?
அவற்றின் ஜீவன்
.
32. எதால் எந்தக்காரியமும் தவறான முடிவைத் தருகிறது.?
கர்வம் என்கிற அகம்பாவம்.
33. எது ஒருவனுக்கு அதி சந்தோஷத்தைத் தரும்?
நல்லோரின் நட்பு
34. எவனால் துயரங்கள், துக்கம் எல்லாம் விலக்க முடியும்?
சகலத்தையும் உதறித் தள்ளினவனுக்கு
35. எவன் செத்தவனுக்கு சமானம்?
முட்டாள்
36. எது ஈடு இணையற்ற செயல்?
தேவையானதை எதையும் காலத்தில் கேட்காமல் அளிப்பது.
37. எது ஒருவனை சாகும் வரை வாட்டும்?
ரகசியமாக தான் செய்த எந்த பாப காரியமும்
38. எதில் முக்யமாக நாட்டம் தேவை? ,
கற்க, ஆரோக்யமாக இருக்க, தான தர்மம் செய்ய.
39. எதை அறவே ஒழிக்கவேண்டும் ?
தீயோர் சகவாசம், பிறர் பொருள் மீது ஆசை ஆகியவற்றை.
40. இரவும் பகலும் எதில் கவனம் இருக்கவேண்டும்?
வாழ்க்கை நிலையாமை, பெண்கள் மீது ஆர்வம் போன்ற எண்ணங்கள் அர்த்தமற்றவை என்பதில்.
61. அறிஞர்களும் போற்றும் ஆசாமி யார்?
இயற்கையிலேயே மரியாதையும், பணிவுமுள்ளவன்
62. சூரியனைக்கண்டு தாமரை மலர்வது போல் எவன் மூலம் ஒரு குலம் மலர்கிறது?
எவனிடம், நற்குணமும், பண்பும், பணிவும் உள்ளதோ அவன் மூலம்.
63. எவனுக்கு உலகம் அடிமையாகிறது?
இனிமையான சொல், எண்ணம் உள்ள தர்மிஷ்டனிடம்
64. புத்திசாலிவிரும்புவது?
இனிய கவிதை சொல்லும் புத்திசாலி பெண்ணை
65. எவனை தீங்கு அணுகாது?
பெரியோர் சொல் கேட்டு அடக்கமாக நடப்பவனை
66. லக்ஷ்மிதேவி எவனை நேசிக்கிறாள்?
நேர்மையான குணமுள்ள சுறுசுறுப்பான புத்திசாலியை
67. எவனை விட்டு செல்வம் ஓடிவிடும்?
ஆசார்யனையும் பிராமணனையும் , கற்றோரையும் தூஷிக்கிற சோம்பேறியை விட்டு.
68. நாம் எவரோடு சேர்ந்து வாழவேண்டும் ?
நல்ல குணம், அன்பு, பண்பு கொண்டவர்களோடு
69. எந்த தேசத்தை விட்டு அகல வேண்டும்?
தயவற்ற, தீய. பொறுப்பற்ற, அல்ப அரசனின் தேசத்தை விட்டு.
70. எவன் வாழ்க்கை துன்பமற்றது?
பொறுப்பான, அமைதியான, சிக்கனமாக குடும்பம் நடத்தும் மனைவியை அடைந்தால். ....!
71. உலகில் எவன் எப்போதும் துக்கமாகவே இருக்கிறான்?
அளவற்ற செல்வம் இருந்தும் பகிர்ந்து கொள்ளும் மனமற்றவன்.
72 எவன் தூஷிக்கப்படுகிறான்?
தரம், தகுதியற்றவர்களிடம் தானம் கேட்பவன்.
73. ராமனை விட மேலானவன் யார்?
மன்மதனே தன் மீது பாணம் போட்டாலும் உறுதி குன்றாதவன்
74. எது மனதில் இரவும் பகலும் இடைவிடாமல் இருக்கவேண்டும்?
இறைவனடி ஒன்றே. உலகில் வேறெதுவும் பற்றி இல்லை
75. கண்ணிருந்தும் குருடன் யார்?
நாஸ்திகன் .
76 எவனை முடமாக கருதலாம்?
வயதை வீணடித்து கடைசி காலத்தில் யாத்ரை போக விழைபவனை..
77.எந்த நீர் தீர்த்த மாகிறது?
உடல் அழுக்கை நீக்குவது அல்ல. மனசின் அழுக்கை போக்குகின்ற நீர்.
78 மனிதன் வாயில் வரவேண்டிய ஒரு சொல்?
''ஹரி '' என்ற பெயர்.
79. அறிவாளி எதை சொல்லக்கூடாது?
பிறரைப் பற்றி பொய்யோ, அபாண்டமோ கூறுவது கூடாது.
.
80. எதை ஒருவன் சம்பாதிக்கவேண்ட
ும்?
அறிவு, செல்வம், பலம், புகழ், புண்யம்.- எல்லாம் நல்ல வழியில்!
41. எதில் உன்னுடைய ஆர்வம் தேவை?
துன்பத்தில் வாடுவோர் மீது இரக்கம் . நல்லோரின் நட்பு.
42. யாரை சீர் திருத்த முடியாது?
தீயவர்களை, சந்தேகப்ராணிகளை, எதிலும் திருப்தியோ சந்தோஷமோ அடையாதவனை, நன்றியில்லாதவனை
.
43. எவனை நல்லவன் என்றறியலாம்?
நல்லொழுக்கம் கொண்டு கடைப்பிடிப்பவனை.
44.. எவன் கீழானவன்?
தீயொழுக்கம் கொண்டவன்.
45. எவனைக் கடவுளே கொண்டாடுவார்?
காருண்யமானவனை.
46. எதைப் பார்த்து அஞ்சவேண்டும்?
குடும்ப வாழ்க்கையாகிய அடர்ந்த பரந்த காட்டைப்பார்த்து.
47. உலகத்தில் வாழும் ஜீவன்களை எவனால் கட்டுப்படுத்தமுடியும்?
எவன் இனிமையாக உண்மை பேசுகிறானோ, எவன் உயிர்களை நேசிக்கிறானோ அவனால்.
48. பார்ப்பவற்றையும், காணாதவற்றையும் அடைய நாம் எப்படி இருக்க வேண்டும்?
நீதி வழுவாத நடு நிலையில் எப்போதும்.
49. எவனைக் குருடன் எனலாம்?
கற்றறிந்தும், தீச்செயல்கள் புரிபவனை.
50. எவன் உண்மையிலேயே செவிடன்?
நல் வார்த்தைகள் காதில் ஏறாதவன்.
51. எவனை ஊமை என்று சொல்லலாம்?
தக்க நேரத்தில் வாய் திறந்து ஆறுதல் அளிக்காதவனை.
52. எது விவேகம்?
கேட்காமலேயே கொடுப்பது.
53. எவன் உண்மை நண்பன்?
நம்மை பாப காரியங்கள் செய்யாமல் தடுப்பவன்
54 எது அழகூட்டுகிறது?
நல்ல குணம்
55. எந்த வார்த்தை மகிழ்ச்சியளிக்க
ிறது?
சத்தியமான பேச்சு.
56. எது மின்னல் போல ஒளிவீசி அழிவது?
தீயவர் நட்பும் பெண்கள் சகவாசமும்
57. எது சிந்தாமணி- -கேட்பதெல்லாம் கொடுக்கும் மணியைப் போல கிடைக்க முடியாதது?
ஒரு நாலு விஷயம்.
58. அடைய கஷ்டமான கிடைக்காத அந்த 4 விஷயம் எது?
1. இன்சொல்லொடு கொடுக்கிற தானம்
2. கர்வமில்லாத ஞானம்.
3. அமைதியான கம்பீரம்.
4. தியாகமனத்தோடு சேர்ந்த செல்வம்
.
59. எது பரிதாபத்துக்குறியது?
கருமித்தனம். லோபித்தனம்.
60. செல்வந்தன் எப்போது புகழடைகிறான்?
தாராள மனதுடன், தர்மிஷ்டனாக இருக்கும்போது.
Wednesday, 4 May 2016
ஒரு பழைய கால கேள்வி பதில். 2
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.