ஷீவாங் ட்சு :
" வரிசையின் கடைசியில் நில்லுங்கள்
உங்களை யாரும் பின்னால் தள்ள மாட்டார்கள்."
வரிசையின் முதலில் நிற்காதீர்கள்.
அப்படி நின்றால் எல்லாரும் உங்கள் பகைவர்களாக இருப்பார்கள். விரைவிலேயே உங்களைத் தண்டிப்பார்கள்.
ஒவ்வொன்றின் எதிர்மறையும் அதனுடனேயே இருக்கிறது.
அவர்கள் உங்களை பாராட்டினால் பின்னால் தண்டிப்பார்கள்.
உங்களை மதித்தால் பின்னால் அவமானப்படுத்துவார்கள்.
அதன் பின்னணி என்ன அதன் அமைப்பு என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
உங்களை யாராவது மதித்தால் அவர் மனதின் ஆழத்தில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக
உணர்கிறார்.
ஏனென்றால் உங்களை மதிப்பதன் மூலம் அவர் தாழ்ந்தவராகிவிட்டாரே!
அவரால் எப்படி உங்களை மன்னிக்க முடியும்? முடியாது
இந்த கணத்தை ஒரு நாளில் நேர் செய்ய வேண்டும்.
அவர் குனிந்து உங்கள் கால்களைத் தொட்ட போது அவர் மனதில் ஆழமான காயம் ஏற்பட்டது.
அவர் உங்களைவிடத் தாழ்ந்தவர் என்ற உணர்வு ஏற்பட்டது.
ஆனால் அப்படி இல்லை என்று அவர் நிரூபிக்க வேண்டுமே!
ஒரு நாள் அவர் உங்களைவிட உயர்ந்தவர் என்று நிச்சயம் நிரூபணம் செய்வார்.
அந்த சமுதாய அமைப்பைப் புரிந்து கொள்ளுங்கள்.
கணக்கு நேர் செய்யப்பட வேண்டும்.
நீங்கள் யாரையாவது பாராட்டும் போது கூர்ந்து கவனியுங்கள்.
உங்களுக்குள் அவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.
நல்ல விழிப்புணர்வுடன் செயல்பட்டால் இதைக் கவனிக்கலாம்.
இப்பொழுது மனதின்ஆழத்தில் இருக்கும் அந்த ஆசையை -
அவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஆசையைச் - செயல்படுத்த கால அவகாசம் தேவை அவ்வளவுதான்.
கூடிய சீக்கிரத்தில் அந்த அவகாசம் கிடைக்கிறது
உண்மையான ஞானி உங்கள் பாராட்டுகளை விரும்பிப் பெற்றுக் கொள்ள மாட்டான்.
கையில் மாலையோடு அவனைப் போய்ப் பார்த்தால்
" இந்த மாலை எல்லாம் எனக்கு வேண்டாம்.
விரைவில் நான் இதற்கும் சேர்த்துக் காசு கொடுக்க வேண்டிய நிலை வரும்.
வந்த வழியே போய்விடுங்கள் "
என்று நிர்தாட்சண்யமாகச் சொல்லிவிடுவான்..
ஓஷோ
Book Name : -
பாதை சரியாக இருந்தால்
(When The Shoe Fits)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.