Monday, 2 May 2016

"நற்பலன் தரும் கனவுகள்"

"நற்பலன் தரும் கனவுகள்"

ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.

வானவில்லை கனவில் கண்டால் பணம்,செல்வாக்கு அதிகரிக்கும்.பதவி உயர்வு கிடைக்கும்.

வானில் நிலவைப் பார்ப்பது ஒளி கனவு கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.

விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால்,சேமிப்பு மேலும் பெருகும்.

திருமணம் ஆகாதோர் பாம்பு கடித்து ரெத்தம் வருவது போல் கனவு கண்டால்,சீக்கிரம் திருமணம் நிகழும்,திருமணம் ஆனோர்க்கு செல்வம் வந்து சேரும்.

ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.

இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலைக் கிடைக்கும்.

நண்பர்  இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.

இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் அதிகாரம், பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.

திருமண கோலத்தைக் கனவில் கண்டால், சமூகத்தில் நம் மதிப்பு உயரும்.

தற்கொலை செய்து கொள்ளுவது போல கனவு கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி,நன்மை பிறக்கும்.

உயரத்திலிருந்து விழுவது போல கனவு கண்டால்பணம்,பாராட்டு குவியும்.

கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.

ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும்.நெஞ்சில் நிம்மதி பிறக்கும்.

மயில், வானம்பாடியைக் கனவில் கண்டால் தம்பதியினரிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

கழுகைக் கனவில் கண்டால் உங்களைத் தேடி அதிஷ்டம் வருவதன் அறிகுறி.கடல் கடந்து சென்று பொருள் ஈட்டப்போவது உறுதி.

கழுதை, குதிரையைக் கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக ஜெயமாகும்.கழுதையைக் கனவில் கண்டால் அதிஷ்டம் ஏற்படும்.எதிர்கால முன்னேற்றம் சம்பந்தமான முயற்ச்சிகள் பலிதமாகும்.திருமணம் ஆகாத பெண்,கழுதையைக் கண்டால் தேர்ந்தெடுக்கக் கூடிய கணவர் திருப்திகரமாக அமைவார்.ஆனால் பணவசதி குறைவுடையவராக இருப்பார்.

மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிஷ்டம் அடிக்கும்.

வாத்து, குயிலை கனவில் கண்டால் பெரிய அதிஷ்டம் அடிக்கும்.

மலத்தை மிதிப்பது போல் கனவு கண்டால், சுபச்செலவுகள் ஏற்படும்.

பசுமாடு கனவில் வந்தால் பணம் பெருகும், ஆனால் சுபச்செலவு வந்து சேரும். எருமை மாடு கனவில் வந்தால் நன்மை வந்து சேரும்.

அதிபயங்கரமான கனவு கண்டால் அவை எப்படிபட்டவையாக இருந்தாலும் சரி,குடும்பத்தில் அமைதி,நன்மை ஏற்படும்.

ஒருவர் தன் கனவில் நிலா,சூரியன், கடவுள், ராஜாக்கள், உயிருடன், இருக்கும் நெருங்கிய நண்பர்கள், பசு, நெருப்பு, வழிப்பாட்டுக்கூடங்கள் ஆகியவற்றைக் கண்டால் ஆரோக்கியமும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

பூக்கள், சுத்தமான உடைகள், இறைச்சி , மீன், பழங்கள், தேனீக்கள் , பாம்பு ஆகியவற்றை கனவில் கண்டால் தீராத நோய் நீங்கும்.

செய்யக்கூடாத காரியங்களைச் செய்யவது, உடல் அழுக்கேறி இருப்பது, இறந்து போவது, அழுவது, சமைக்காத பச்சை இறைச்சியைச் சாப்பிடுவது போல கனவில் கண்டால் நோய்கள் இருந்தால் நீங்குவதுடன் நிறைய பணம் வந்து சேரும்.

தண்ணீர் தேங்கியிருப்பது போல் கனவு கண்டால் புதிய நண்பர்கள் நிறையக் கிடைப்பார்கள்.இளம் வயதினர்க்கு, காதலன்,காதலி கிடைப்பார்கள். தேங்கிய நீர் நல்ல தண்ணீர் என்றால் நல்லது.

தண்ணீர் நிறைந்த குளத்தை,நீர் நிலையை கனவில் கண்டால் பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும்.நன்மை கிடைக்கும்.

தாமரைப் பூவை கனவில் கண்டால் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.நிறைய பணம் சேரும்.கடன் தீரும்.வியாபாரத்தில் அபிவிருத்தி காணும்.

குளத்தில் கால் கழுவுவது போல் கனவு கண்டால் கஷ்டம் மற்றும் நோய் நீங்கும்,உற்சாகம் கூடும்.நல்ல செய்திகள் வரும்.

குளத்தில் குளிப்பது போல் கனவு கண்டால் கடவுள் அருள் நிறைய கிடைக்கும்.

வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்கியிருப்பது போல் கனவில் வந்தால் பொருளாதார வளம் ஏற்படும்.

மூதாதையர்கள் கனவில் வந்தால் அல்லது ஆசீர்வாதம் செய்தால் நன்மை பிறக்கும்.பிரச்சனைகள் இருந்தால் நல்ல முடிவு ஏற்படும்.

கனவில் இறந்து போன உறவினர்கள் பேசினால்,உதவிக்கு நிறையப்பேர் வருவார்கள். நல்ல பெறும், புகழும் கூடும்.

கனவில் உறவினர் உங்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டால் பணம் வரும்.எதிர்பாராத பணம், புகழ் குவியும். பிரிந்து போன குடும்பங்கள் ஒன்று கூடும். உறவினர்களிடையே இருந்த விரிசல் மறையும்.

கனவில் மூதாதையர்கள் உறங்குவதாகக் கண்டால்,வரவிருந்த ஆபத்திலிருந்து தப்பிவிடுவீர்கள்.மூதாதையர் உங்களுக்கு சாப்பாடு பரிமாருவதாக கனவு கண்டால், சுப செய்தி வந்து சேரும்.

கனவில் நீங்கள் கிழிந்த உடையை உடுத்திஇருந்ததாக வந்தால் பணம் வந்து சேரும். எந்த செயலிலும் தனியாக செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள்.

கனவில் பாம்பு வந்தால் கடவுள் உங்களுக்கு துணை நிற்பார்.அதிஷ்டம் ஏற்படும். பெண்கள் கனவில் பாம்பு வந்தால் ஆயுள் கூடும்.கடன் பிரச்சனைகள் தீர்ந்து முடிவுக்கு வரும்.

கனவில் யானை வந்தால் அரசாங்க உதவிக் கிடைக்கும்.நீண்ட நாட்களாக நடந்து வந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு கிடைக்கும்.யானை மாலை போடுவது போல் கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும்.பிரிந்த கணவன் மனைவி இடையே உறவு ஏற்படும்.இளம் தலைமுறையினராக இருந்தால் திருமணம் நடக்கும்.

ஊதுபத்தி புகை வருவது போல் கனவு கண்டால் துக்கம் நீங்கும்.

தீயை கனவில் கண்டால் நோய் விலகும்.புதிய உற்சாகம் பிறக்கும்.

உங்கள் கனவில் திருவிழாவைக் கண்டால் புது வீடு வாங்கும் யோகம் ஏற்படும். வாகன யோகமும் உண்டாகும்.சொத்து சேரும்.

நகைகள் வாங்குவது போல் கனவு கண்டால் புதிய தொழில் தொடங்குவீர்கள். இல்லாவிட்டால் இருக்கின்ற தொழிலில் மேன்மை உண்டாகும்.

நகைகளை அடகு வைப்பது போல் கனவு வந்தால் சொத்து விற்பனை ஆகும்.

நகைகளை  களவு போவது போல் கனவு கண்டால்,பணவரவு உண்டாகும்.

வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்வது போல் கனவு கண்டால், உல்லாசப்பயணம் மேற்க்கொள்ளுவீர்கள்.புகழ் அதிகரிக்கும்.

                                       

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.