⚀ நான் ⚁நான் ⚂ நான் ⚃ நான் ⚄ நான் ⚅ நான்
நான் சம்பாதித்தேன்,
நான் காப்பாற்றினேன்,
நான் தான் வீடு கட்டினேன்,
நான் தான் உதவி செய்தேன்,
நான் உதவி செய்யலனா அவர் என்ன ஆகுறது,
நான் பெரியவன்,
நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன், நான் நான் நான் நான் என்று மாறுதட்டி கொள்ளும் மனிதர்களே...
நான்தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா?
நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா?
நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா?
நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா??
நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா ?
நான் தான் காய்களை பழமாக மாற்றுகிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா ?
நான் தான் கடலில் மீன் பிடிக்கிறவனுடைய வலையில் மீனை சிக்க வைக்கிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.