உன் உள் நிலையை வைத்து தான் வெளி நிலையையும் பார்க்கிறாய் - பகிர்வு
உனது உள் நிலை எப்படியோ அதே நிலையில் வெளியே மலர்கின்றது
நீ குற்ற உணர்வுடன் இருந்தால், நீ பார்க்கும் பார்வை - உன்னை சுற்றி சாதரணமாய் வெளியே இருந்து வரும் பார்வையும், வார்த்தைகளையும் உனக்கு அதே தன்மையில் தெரிகிறது,
நீ கோபத்துடன் இருந்தால் வெளியே இருப்பவர்களையும் கோபத்துடன் பார்க்கிறாய்,
நீ காமம் கொண்டு இருந்தால் வெளியே பார்க்கும் கண்கள் காமம் கொண்டவையாக இருக்கிறது,
நீ எரிச்சலுடன் இருந்தால் உன்னை சுற்றிலும் உள்ள அனைத்தும் எரிச்சலாக தெரிகிறது.
நீ சோம்பேறி தனத்துடன் இருந்தால் உனது வெளி வேலைகளும் சோம்பேறி தனமாகவே செயல் படுகிறது,
நீ சலிப்புடன் இருந்தால் உன்னை சுற்றி உள்ளவர்களை சலிப்பாகவே பார்க்கிறாய்,
நீ பொறாமை தனத்துடன் இருக்கும் பொழுது உன்னை சுற்றி நடப்பதை உன்னால் பொறுக்க முடிவதில்லை,
என இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் ,
இந்த நிலைகளும் இயற்கையின் அடிப்படையில் நாம் மேலோட்டமாக இருக்கும் நிலையில்
மலர்வது,
இவை அனைத்துமே முடிந்து போன கடந்தகால சுமையை எதிர்பார்ப்பு கொண்டு சுமப்பதினால் மலரும் ஒரு நிலை
இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு ரசித்து வாழு!
நீ சிரிப்புடன் இருக்கும் பொழுது உன்னை சுற்றி உள்ளவர்களை சிரிக்க வைக்கின்றாய்,
உன்னிடம் அன்பு ஊற்றெடுக்கும் நிலையில் இருந்தால் அதே அன்பை அதே தன்மையில் வெளியே காட்டுகிறாய்,
நீ காரணம் இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறாய், அதே தன்மையில் காரணம் இல்லாமல் சந்தோஷத்தை உருவாக்குகின்றது.
நீ தியானிப்பவனாக இருக்கும் பொழுது அதே தியானத்தன்மை மற்றவர்களுக்கு உள்ளும் ஊடுருவி செல்கின்றது,
உனது நிலை உதவும் நிலையாக இருந்தால் உன்னை சுற்றி இருக்கும் அனைத்து செயல்களும் சேவையின் அடிப்படையில் இருக்கும்,
உனது மனம் விரிந்த நிலையில் உன்னை சுற்றிலும் உள்ள அனைவரின் மனதையும் (ஆன்மீக உரைகள் மூலம் ) விரிய செய்கின்றாய்,
இவையும் இயற்கையின் தன்மையே இது நிகழ்காலத்தின் அடிப்படையில் மலர்கின்றது.
இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு ரசித்து வாழு!
உனது உள் நிலையில் எப்படி உள்ளாயோ- அதே தன்மை தான் வெளி நிலையில் உனது உணர்வுகள் வெளிப்படுகிறது.
இங்கு மாற்ற வேண்டியது உனது உள் நிலையை தான் - உன்னை நீ மாற்றாமல் வெளியே மாற்றத்தை தேடி உடைந்து போய் முட்டாள் ஆகாதே !
உனது உள் நிலை மாறினால் வெளியே இருக்கும் குப்பைகளில் கூட அன்பை பார்க்க முடியும்
உனக்கு உள்ளே குப்பையை வைத்து கொண்டு வெளியே அன்பை தேடினால் அதை விட முட்டாள் தனம் வேறு ஒன்றுமே இல்லை.
இந்த நிலைகள் என்பது உனக்கு உள்ளே அவ்வப்போது மாறி மாறி செயல்படுகிறது,
இந்த மாறுதல் இல்லாத நிலையான நிலையை உணர ஆழமான தியானம் செய் !
இந்த நிலைகள் கடந்த செல்ல தியானம் செய்!
உனது தியானத்தில் இந்த நிலைகளை உடைத்து எரி- அதில் கிடைக்கும் மௌனத்தை ஆழமாக உணர்ந்து பார் !
அந்த மௌனத்தில் கிடைக்கும் சுகத்தை பார் - நிலையான மகிழ்ச்சியில் வாழு!
உனது உள் நிலையை மாற்று, நிலைகள் கடந்து போ - பிரபஞ்சம் உனக்காக சதா நேரமும் காற்றுக் கொண்டு இருக்கிறது.
நன்றி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.