மனத்தின் கருவிதான் சிந்தனை
அது உண்மையான ஒன்றல்ல, ஏனெனில்
எந்த ஒரு சிந்தனையும் உண்மையாக இருப்பதற்கு சாத்தியமே இல்லை
ஏனென்றால், மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பாகிய வெறும் நினைவுதான்
அது கடந்த காலம் அல்லது எதிர் காலத்தைப்பற்றி மட்டுமே அசைபோட்டுக்கொண்டிருக்கிறது
எனவே, மனம் எப்போதும் உண்மையானதாக இருக்க முடியாது
மனம் உண்மையற்றதாக இருக்கும் பட்சத்தில், சிந்தனையும் உண்மையாக இருக்க சாத்தியமில்லை
ஆனால் சுயமாக, இருப்பாக இருப்பதில் உண்மை சாத்தியமாகிறது
சிந்தனையற்ற நிலைதான் உண்மையானதும் கூட
மனதை பயன்படுத்துவதற்கு மொழி தேவையாய் இருக்கிறது
மொழி என்பது இயற்கையின் பரிபாஷை, அது உன்னுடையது அல்ல
நீ மனதை அற்றுப்போக வைத்தால்தான் சத்தியத்தை உணர முடியும்
தியானம் என்பதே இந்த மனமற்ற நிலையை அடைவதறகுத்தான்
சிந்தனையற்ற நிலையை அடையும் போது நீ தூய்மை ஆகிறாய்
இதை உணரும்போது பரவசத்தை தெரிந்து கொள்கிறாய்
சிந்தனை என்பது எண்ணத்தால், மனத்தால கற்றுக் கொண்டது
அப்படியாக கற்றுக் கொண்டதை விட்டு விடவும் முடியும்
ஆனால், உன்னுடைய இயல்பு அல்லது இருப்பு என்பது பெற்றுக்கொண்டதல்ல
அது எப்போதும் உன்னிடமே இருந்து வந்திருக்கிறது
அதுதான் உன்னுடைய பிரக்ஞை என்ற சுயவிழிப்புணர்வு
உன் பிரக்ஞையின் பண்பை ஓர் அனுபவத்திற்குள் கொண்டுவரும் போது அந்த அனுபவம் முதிர்ச்சியாகிப் போகிறது
அப்போது நீ என்ன செய்தாலும் சரியாகவே செய்கிறாய்
நீ பிரக்ஞையோடு வாழும்போது ஜீவனை உணர்ந்தவனாகிறாய்
அதுவே விழிப்புணர்வுள்ள ஜீவனின் முதிர்ச்சியாகும்
முதிர்ச்சி அடைந்த ஞானிகளுக்கு இறப்பும் ஒரு அனுபவமாகிறது
எனவே நீ இயல்பாக இருப்பது என்பதுதான் "சிரஞ்சீவிதம்"
உன்னுடைய இருப்பான உயிர்ப்புதான் "ஆனந்தம்"
உன்னுடைய ஆனந்தமான இருத்தல்தான் "தெய்வீகம்"
உன்னுடைய விழிப்புணர்வாகிய பிரக்ஞைதான் "சத்தியம்"
Tuesday, 10 May 2016
சிந்தனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.