Thursday, 12 May 2016

ஆலோசனை

மாருதி நிறுவனத்தில் ஏராளமான கார்கள் தயாரிக்கப்பட்டு ஒரு கிடங்கில் அடுக்கப்பட்டிருந்தன. அதை வெளியே கொண்டுவரும் போது சிக்கல் ஏற்பட்டது.
காரின் உயரத்தைவிட வாயிலின் உயரம் ஒரு அங்குலம் சிறிதாக இருந்தது. உள்ளே ஏற்றும்போது வராத பிரச்சனை வெளியே கொண்டு வரும் போது ஏற்பட்டது. எப்படி வெளியே கொணர்ந்தாலும் மேற்கூரை இடிக்கும். குறைந்தபட்சம் காரின் மேற்புறம் கீறல் விழக்கூடும். கீறல் விழந்தால் பரவாயில்லை. மறுமுறை பெயிண்ட் அடித்து டபுள் கோட் கொடுத்து விடலாம் என்றார் மேலாளர். வேண்டாம். வாயிலின் மேற்புறம் ஒரு செங்கல் கனத்துக்கு இடித்துவிடுவோம். பிறகுமீண்டும் சிமெண்ட் பூசிவிடலாம் என்றார் அந்த கட்டிடத்தின் இஞ்சினியர்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த வயதான காவலாளி ஒன்று சொன்னார், அதெல்லாம் வேண்டாம், கார்களின் சக்கரத்தின் காற்றை இறக்கிவிடுங்கள் சரியாக போய்விடும் என்றார். கேட்டுக் கொண்டிருந்த கம்பெனியின் டைரக்டர் பொட்டில் அடித்தது போல் நிமிர்ந்தாராம்.
எப்பேர்ப்பட்ட ஆலோசனை. இஞ்சினியர்களும், டெக்னீஷியன்களும் அங்கே கூடியிருக்க எவருக்கும் தோன்றாதது ஒரு படிப்பறிவு இல்லாத வாட்ச்மேனுக்குத் தோன்றிவிட்டது. இவர்கள் தொழில் நுட்பத்தில் கரைகண்ட நிபுணர்கள். பெரிய பிரச்சினைகளையெல்லாம் சமாளிப்பவர்கள். ஆனால் இந்த சிறிய பிரச்சினை அவர்களை திக்குமுக்காடவைத்துவிட்டது.
அன்றிலிருந்து படித்தவன், படிக்காதவன் அனைவரிடமும் ஆலோசனை கேட்கும் பழக்கம் கட்டாய கடமையாகவே மாறிவிட்டது அங்கு. தற்போது முன்னணியில் உள்ள பல நிறுவனங்களிலும் இது இயல்பான நடைமுறையாகவே உள்ளது....!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.