Wednesday, 25 May 2016

தோஷத்தை அழித்து விடும் செயல்கள் ..

நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் செயல்கள் ..

நம்முடைய சில செயல்கள் நமக்கு எவ்வாறு தோசமாகி நம்முடைய வளர்ச்சியை கெடுக்கிறது என்று நமக்கு தெரியாது (இதை பற்றி ஒரு பதிவை பதித்தேன் )
அதுபோல சில நல்ல செயல்கள் நம்முடைய தோஷத்தை விளக்கி நமக்கு நம்மை செய்யும் ......

1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும் .

இந்த விவரத்தை மாற்றி சொல்லலாம் ,படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும்
குடி நீர்  காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்ட சினிக்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும் ....

2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும் .

3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய 
பணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து
ஆயுளை விருத்தி செய்யும் .

4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள்  மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின் ஆசிகள் கிடைக்கும் .

5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு   உதவுதல்
தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும் .

6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு   அளிப்பது  சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும்  வம்ச விருத்தி செய்யும் .

7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,
நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால்  தொட்டு வணங்குதல் ,மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் ,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல்  செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் .

8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,புதன் கிழமை
தோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை ,பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )
நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில் ,
மென்மையான வாழ்க்கையை கொடுக்கும் .

9.நாகம்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது ,இறந்த நாகத்தின் உடலை
கண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,
குடி கெடுத்தவன் ,குடிகாரன் ,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு -கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் .
( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமும் தான் ,தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )

10.பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது,
வெள்ளத்துடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும்  ,இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள் ....

இவைகள் பொதுவானவை
ஒரு முறை செய்யும் பரிகாரம் அல்ல
வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை
புரிந்து செய்தாலும் ,தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான் .....

நன்றி

அகத்தியர்
காக்கை சித்தர் ஆசிகளுடன் .......

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.