Saturday, 28 May 2016

தந்திரமான மனது :

தந்திரமான மனது :
நீங்கள் வான ஊர்தியில் செல்லும்போது அதன் ஓட்டுனர்
எல்லாப் பொறுப்புக்களையும் தானே எடுத்துக்
கொள்கிறார் என்ற ஆறுதலுடன் தேநீர் குடித்துக் கொண்டு
பக்கத்தில் இருப்பவருடன் மகிழ்ச்சியாகப் பேசிக்
கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் மிகுந்த பாதுகாப்பில் இருப்பதாக உணர்கிறீர்கள்.
அதைப் போலத்தான் கடவுளையும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.
''நீங்கள் எப்படி இருக்க ஆசைப் படுகிறீர்களோ அப்படியே இருக்கலாம்.நீங்கள் நம்பும் கடவுள் தான் உண்மையான தகப்பனார்.அவருக
்கு எல்லாம் தெரியும். அவருடைய அனுமதி இல்லாமல் ஒரு இலை கூடக் கீழே விழாது. எல்லாமே நன்மைக்குத்தான்.''
இப்படிக் கருதிக் கொண்டிருப்பது எவ்வளவு சௌகர்யமானது?
இந்த மனம் எவ்வளவு தந்திரமானது!
இந்தக் 'கடவுள்' உங்கள் தந்திர மனதின் வேலைதான்.
ஞானி சாரஹா,''நம்பிக்கை என்பது உண்மை இல்லை.
உண்மை நம்பிக்கை ஆகாது.
உண்மை என்பது நீங்களே அனுபவித்தல்தான்,''என்கிறார்.
--- ஓஷோ

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.