Sunday, 22 May 2016

அன்பும் ஆணவமும

அன்பும் ஆணவமும்.......

அன்பு எப்போதும் தலை வணங்க தயாராக இருக்கும்......!!!

ஆணவம் ஒரு போதும் தலை சாய்க்க தலைபடுவதில்லை........!!!

அன்பானது தான் ஏதாவாது கொடுக்கும் போதெல்லாம் சந்தோஷமடைகிறது........!!!

ஆனால்......

ஆணவமானது ஏதாவது ஒன்றை கைப்பற்றும் போது தான் சந்தோசம் அடைகிறது.......!!!

அன்பெனும் மலர்கள் இருக்கும் போது தான் ஒருவன் அரசனைப் போல் ஆகி விடுகிறான்.........!!!

ஆனால் ஆணவம் எனும் முட்கள் இருக்குமேயானால் அவன் துக்கமும் ஏழ்மையும் நிறைந்தவனாகி விடுகிறான்........!!!

அன்பு யாருக்காவது சௌகரியத்தைக் கொடுக்கும் போது ஆனந்தம் அடையும்........!!!

ஆனால் ஆணவமோ அசௌகரியத்தைக் கொடுக்கும் போது தான் ஆனந்தம் அடையும்........!!!

அன்பு எவ்வித உள்நோக்கமும் அற்றது.......!!!

ஆணவம் எப்போதும் உள்நோக்கத்தோடு செயல்படும்........!!!

அன்பில்  எவ்விதமான நிபந்தனையின்றி கொடுக்கும் தன்மை இருக்கும்........!!!

ஆணவம் அதிக அளவில் திரட்டுவதற்குமுற்படும்........!!!

அன்பு எப்போதும் பாசத்தை தான் கேட்கும்.........!!!

ஆணவம் எப்போதும் பணத்தைக் கேட்க்கும்........!!!

தான் பிறரால் முறிக்கபடுவது கூட அன்பிற்கு சந்தோஷத்தை கொடுக்கும்........!!!

ஆனால் ஆணவமோ ஏதாவது பறித்துக் கொண்ட பின்னரும் மகிழ்ச்சி அடையாது........!!!

அன்பு என்பது வாரி வழங்குவது.......!!!

ஆணவம் என்பது கேட்டுக் கொண்டே இருப்பது.......!!!

இதில் நாம் எந்த வகையில் உள்ளோம் என்று ஆராய்ந்து தெளிந்து கொள்ள முயல்வோம்.......!!!

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.