Wednesday 25 May 2016

பக்தி செலுத்துவதால் என்ன பயன் ?

இறைவனிடம் பக்தி செலுத்துவதால் என்ன  பயன் ?

சிஷ்யன் ஒருவன் தன் குருவிடம் .,
எல்லாம் விதிப்படிதான் நடக்கும் எனில் பக்தியினால் என்ன பயன் குருவே ?.,என்று வினவினான்,

குரு அதற்கு பதில் கூறாமல் ,தனது இரண்டு வேஷ்டிகளை கொடுத்து உடனே தோய்த்து வருமாறு
சிஷ்யனிடம் கொடுத்தார்.,

சிஷ்யன் அவற்றை தோய்த்து எடுத்து வந்தான் ,

குரு அவற்றுள் ஒன்றை நல்ல வெளிச்சம் உள்ள காற்றோட்டமுள்ள நேராக வெயில் படும் இடத்தில் 
உலர்த்தச் சொன்னார்.,

மற்றொன்றை.,

இருட்டான காற்றோட்டம் சற்றும் இல்லாத ஒரு அறையினுள் உலர்த்தச் சொன்னார்.,

இரண்டையும் மறுநாள் மதியம் எடுத்துக் கொண்டு ,தன்னை பார்க்க வருமாறு  பணித்தார்.,

சிஷ்யனும் அவ்வாறே செய்து - மறுநாள் இரண்டையும்
குருவிடம் கொண்டுவந்தான் .,

நீ  உலர்த்தி கொண்டு வந்த இரண்டு துணிகளிலும் என்ன

வித்தியாசத்தை கண்டாய் என குரு கேட்டார்.,

சிஷ்யன் பவ்யமாக "வெயிலில் உலர்ந்த துணி பளிச்சென்று ", முடமுடப்பாக நன்றாக காய்ந்து  உடனே
உடுத்தும் வண்ணம் உள்ளது,
நிழலில் இருட்டில் போட்ட துணியோ, இன்னும் முற்றும்
காயாமல் அதுமட்டுமன்றி ,முடை நாற்றம் அடிக்கிறது என கூறினான் .,

குரு புன்சிரிப்புடன்  இப்போது புரிந்ததா
,"இது தான் பக்தி உள்ள மனதிற்கும் ,
பகதி இல்லாத மனதிற்கும் உள்ள வேறுபாடு ".,எனக் கூறினார்.,

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.