ஏழை ஒருவன் ஜென் துறவியைப் பார்க்கச் சென்றான். "குருவே, நான் பெரும் ஏழை. என்னிடம் என் உயிரைத் தவிர வேறு சொத்து இல்லை. நான் வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்" என்று கேட்டான்.
அதற்கு குரு "நான் 5,000 தருகிறேன். உன் கைகளை என்னிடம் வெட்டிக்கொடு" என்றார்.
அவன் ''5,000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது'' என்றான்.
"சரி, நான் உனக்கு 15,000 ரூபாய் தருகிறேன். உன் கால்களைக் கொடு" என்றார். அதற்கும் அவன் ஒப்புக்கொள்ளவில்லை.
"வேண்டுமென்றால் 50,000 ரூபாய் தருகிறேன். உன் கண்களையாவது கொடு" என்றார் குரு.
அதற்கும் அவன் முடியாது என்றான். ''உனக்கு 20 லட்சம் தருகிறேன். உன் உயிரைக் கொடு'' என்றார்.
அதற்கு அந்த ஏழை, ''என்னால் நிச்சயம் நீங்கள் சொல்வதை செய்ய முடியாது'' என்றான்.
அதைக் கேட்ட அந்த குரு, "உன்னிடம் உன் உயிரைத் தவிர வேறு எந்தச் சொத்தும் இல்லை. எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும் கொடுக்க விரும்பாத விலை மதிப்பற்ற உயிரை கொண்டுள்ள நீ எவ்வாறு ஏழை ஆக முடியும். ஆகவே, உழைத்து வாழ்க்கையில் முன்னேறு" என்றார்.
விலைமதிப்பில்லாத நம் உழைப்பு ஒன்று போதும் வாழ்வை ஜெயிக்க
Friday, 6 May 2016
வாழ்க்கையில் முன்னேறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.