Sunday, 1 May 2016

அமைதியற்ற மரணம்

அருளும் பொருளும் :

மனிதனாகப் பிறந்த பயனை அடைவதற்குப் பொருள்வளமும் அதற்கேற்ற முயற்சியும் செயல்களும்தான் முக்கியம்.

அருள்துறைக்காக காலத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லையென்று பலர் நினைக்கின்றார்கள் .

வேறு சிலர் அருள் துறையில் தான் இறைவன் அருள் கிடைக்கும். பேரானந்த வாழ்வு கிட்டும்.

அதனால் பொருள் துறையை ஒதுக்கிவிட்டு அருட்துரையிலேயே முழு நேரமும் முயற்சி செய்ய வேண்டும்.அருள் வேண்டுபவர்கள் அதற்காக தவம்

அறம் முதலியவற்றில் முழுமையாக ஈடுபடுவதற்கு பொருள் துறையில் இருந்து ஒதுங்கிவிடல் வேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பது தவறு.

இன்பம் துன்பம் அமைதி பேரின்பம் எனும் அனுபவங்களைத் துய்த்து வாழும் மனிதனுக்குப் பொருளும் வேண்டும் ,அருளும் வேண்டும் .

ஒன்றிலிருந்து மற்றொன்று இல்லாவிட்டால் வாழ்வு நிறைவு பெறாது .

அறவழியில் பொருளீட்டுவதே பொருள் செழிப்புக்கு வழியாகும்.ஈட்டும் போதே , செலவாகின்ற போதே, செலவு போக மீதமுள்ள பொருளில், பிறர் நலனுக்காக ஒரு சதவீதம் ஒதுக்கி செலவு செய்து பழகிக் கொள்ள வேண்டும்.

எஞ்சிய பொருளை நல்ல முறையில் தேவையுள்ளவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் .

இதனால் எப்போதும் மனம் பளுவற்றதாகவும் ,இனிமையாகவும் , அமைதியாகவும் இருக்கும்.

அறவழியில் பொருளீட்டுபவர்களுடைய பொருள் விட்டுச் சென்றாலும் அப்பொருட்கள் பலருக்கும் நலமாளிக்கும் வகையில் செலவாகும்.

நிரந்தரமாகக் கிடைப்பதோ இன்பம் மட்டுமே அறவழியில் ஈட்டி பொருள் சேர்த்துவைப்பவரிடம் அவர் சேர்த்து வைத்து இருக்கின்ற பொருள் தனக்குப் பின்னால் நல்ல வழியில் சமுதாயத்திற்கு பயன்பட வழி வகுத்து விடுகிறார் .

பொருள் பற்று என்ற நிலையில் இருந்து தன்னைத் தானே அவர் விடுவித்துக் கொள்கிறார்.

அந்த அளவுக்கு அருள் பற்று மலர்ந்து விடுகிறது.மனம் இனிமையான அமைதியில் திளைக்கிறது.

மரணம் நெருங்க நெருங்க அந்த இன்ப வெள்ளத்திலேயே மிதந்து கொண்டு இறைநிலையோடு கலந்து விடுவர் .

அறநெறி மறந்து பொருள் சேர்த்தவர் மரணம் நெருங்குகின்ற போது அப்பொருளை எண்ணி வருந்துகின்றனர்.
அறிவில் இருள் சூழ்கிறது.

மரணம் நெருங்க நெருங்க நிமிடம் தோரும் அச்சப்படுவர்.

இந்த அச்சத்தில் அமைதியற்ற மரணம் அடைவர்.

---வேதாத்திரி மகரிஷி

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.