Saturday, 28 May 2016

மந்திரங்களை மூச்சுப் பயிற்சியோடு கலந்து

மந்திரங்களை மூச்சுப் பயிற்சியோடு கலந்து அதிகாலையும், மாலை வேளைகளிலும் உச்சரித்து பிராண சக்தியை அதிகப்படுத்திக் கொண்டார்கள் நம் முன்னோர்களான ரிஷிகளும், சித்தர்களும். இன்று விஞ்ஞானம் மனித உடற் கூறுகளைப்பற்றி ஆராயும் போது, அதில் பிராண சக்தியே எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இயங்குவதைக் கண்டுபிடித்திரு
க்கிறார்கள். அதையே ஆக்சிஜன் என்ற விஞ்ஞானப் பெயரால் வழங்குகிறார்கள்.
இப்போது நாம் மணற்பரப்புகளாக காண்பவை எல்லாம் யுகங்களுக்கு முன்பு மலைகளாகவும் காடுகளாகவும் இருந்தவையே. இயற்கையின் சீற்றங்களாலும், நீரின் அடித்துச் செல்லும் வேகத்தாலும், காற்றாலும், தாவரங்களின் வேர்களாலும் உடைக்கப்பட்டு தூளாகிய பாறைத் துகள்களே இந்த மண். இவையெல்லாம் கோடிக்கணக்காண ஆண்டுகளாக நடந்த மாற்றம். இன்னும் பூமியுள்ள காலம் வரையும் நடக்கும். அப்படி ஒரு காலத்தில் மலைப் பாங்கான பகுதி அதிகமாக இருந்த போது, அங்கு வாழ்ந்து வந்த ரிஷிகள் முனிவர்கள், சித்தர்கள் அங்கு காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதால், குறைந்த காற்றில் இருந்து நிறைய பிராண சக்தியைப் (ஆக்சிஜனை) பெற கண்டுபிடித்த பயிற்சியே பிராணாயாமம்.
மேலும் பிராணாயாமம் மூலம் உடல் திசுக்களில் எல்லாம் ஆக்சிஜனாகிய பிராண சக்தியை நிரப்பி, மனதினால் அந்த ஆக்சிஜனை குண்டலினி என்கிற சேமிக்கப்பட்ட பிராண சக்தியோடு கலந்து தவ சக்தி மூலம் அதை ஓஜஸாக்கி, சுழுமுனை நாடியைத் திறந்து, அது வழியாக மேலேற்றி மூளைப் பகுதியில் உற்பத்தியாகும் தேஜஸ் என்கிற சுரப்பியோடு கலந்து அழியா தேகமும் ஆன்மிக ஞானமும் பெற்றார்கள். ஆன்மிக வாழ்வாகட்டும், இல்லற வாழ்வாகட்டும் விந்துவானது பிராண சக்தி அதிகமாகக் கொண்டு விளங்க வேண்டும். அதற்கு பிராணாயாமம் மிகவும் பயன்படும். முக்கியமாக, குழந்தை பாக்கியத் தடையில் உயிரணுக்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி ஒரு வரப்பிரசாதம். பெண்களுக்கு ஏற்படும் குழந்தை பாக்கியத்தடை சிக்கலில் இந்தப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் பெரும்பாலான தடைகள் நீங்கும்.
மேலும் ஒரு இரகசியம் என்ன வென்றால் உடலில் காரத் தன்மையையும், அமிலத் தன்மையையும் தீர்மானிப்பது ஆக்சிஜனே. இந்த இரு தன்மைகளே ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதையும் முடிவு செய்கின்றன. பெண்களுக்கு குழந்தை பாக்கியத் தடை ஏற்படும் காரணங்களைப் பற்றி பார்த்தால், 1. பாதிக்கட்ட பெண்ணின் பாலுறுப்புகளில் இருந்து தகவல் மூளைக்கு செல்வதில்லை. 2. பாதிக்கப்பட்ட பெண்ணின் உறுப்புகளின் செல்பாட்டிற்கான கட்டளைகள் மூளையில் இருந்து வருவதில்லை. 3. பெண்ணின் உறுப்புகளில் உள்ள திசுக்களுக்கு தேவையான புரத உற்பத்திக்கான நொதிகள் நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்டரியிலிருந்தும், அட்சினல் சுரப்பியிலிருந்தும், கருவகங்களில் இருந்தும் சுரக்காதது அல்லது அதற்கான கட்டளை மூளையிலிருந்து வராதது. 4. சரியான உணவுப் பழக்கம் இல்லாதது. 5. ஆக்சிஜன் பற்றாக் குறை. 6. பாலின உறுப்புகளில் இருந்து கழிவுகள் நீங்காமல் இருப்பது. இந்தக் காரணங்களால் கருமுட்டை உற்பத்தி ஆகாமல் போவது, கொழுப்பு திரண்டிருப்பது, கருப்பை மூடியிருப்பது, மாதத் தீட்டு ஏற்படாமல் இருப்பது போன்ற குறைகள் ஏற்படும்.
இதில் பிராணாயாமம் எப்படி இந்த பிரச்சனையை சீர் செய்யும் என்றால், இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும் போது, அதிகப்படியான ஆக்சிஜன் திசுக்களுக்கு கிடைக்கிறது. கார்பன் டை ஆக்சைடு அதிக அளவில் வெளியேறுகிறது. பெண்களின் பாலுறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கும் படிக்கு நரம்புகளின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன(தகவல், கட்டளை ஒருங்கிணைப்பு). திசுக்களின் கடினத் தன்மை போய் மென்மை அடைகிறது. இ,த்த பிளாஸ்மா பெண்களின் பாலுறுப்புகளுக்கு எளிதாகச் செல்கிறது. இரத்தத்தில் ஆக்சிஜன் அடர்வு அதிகரிப்பும், திசுக்களில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பும் ஏற்பட்டு, பரிமாற்ற வேகம் அதிகரிக்கிறது. இதனால் பெண்ணின் உறுப்புகளின் செயல்பாடுகள் மிகுந்திடுகின்றன. இதோடு கூட சலபாசனம், தனுராசனம், பஸ்சிமோத்தாசனம், ஹாலாசனம், சர்வாங்காசனம், மத்ஸ்யாசனம், சிரசாசனம். யோகமுத்ரா, பத்மாசனம், உட்டியாணம், நௌலி, சவாசனம் போன்ற ஆசனங்களையும் கற்று செய்து வந்தால் மிக விரைவில் பலன் கிடைப்பதோடு, அறிவான ஆரோக்யமான பிள்ளைகள் பிறக்கும் என்பது உறுதி.
ஆண்களும் குழந்தை பாக்யத் தடை நீங்க இந்த ஆசனங்களையும், பிராணாயாமம் பயிற்சியையும் செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். தனுராசனமும், யோக முத்ராவும் ஆண்கள் செய்ய வேண்டியதில்லை. அர்த்த மத்ஸ்யேந் திராசனம் செய்வது நல்லது. பிராணாயாமம் செய்யும் போது உட்டியாணா ஜாலந்திர மூலபந்தங்களுடன் கும்பகம் செய்ய வேண்டும். இதனால் ஆண் இனப்பெருக்க மண்டலங்களுக்கு இரத்த நாளங்கள் அதிகமாக இரத்தத்தை அளிக்கும். ஆக்சிஜன் குறைபாடு உள்ளவர்களுக்கு உடலில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். அமிலத்தன்மை அதிகம் உள்ளவர்களுக்கு பெண்குழந்தைகளே பிறக்கும். ஆக்சிஜன் அதிக அளவு பெறுகிற உடல் அமைப்பு பழக்க வழக்க முள்ளவர்களுக்கு காரத்தன்மை அதிகமான உடல் அமைப்பு இருக்கும் இவர்களுக்கு ஆண் குழந்தைகள் அதிகம் பிறக்கும். மலைப் பிரதேசங்களில் ஆண்குழந்தைகளைவி
ட பெண்குழந்தைகள் அதிகம் பிறப்பதன் காரணம் இதுதான்.
ஆக்சிஜன் நம் உடலில் வெப்பக் கட்டுப்பாட்டுக் காரணியாகத் திகழ்கிறது. புரதங்களை உற்பத்தி செய்கிறது. வளர்சிதை மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இதயத்தின் இடது ஆரிக்கிள், இடது வெட்ரிக்கிள் அறைகளில் ஆக்சிஜன் செல்லும் போது மின் சக்தியை இரத்தத்திற்கு அளிக்கிறது. அந்த மின் சக்தியே உயிர் சக்தியாக நம் உடல் முழுவதும் பரவயிருக்கிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.