நீங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்வது
என்பதுதான் மிகவும் மகிழ்ச்சியானது
வாழ்க்கையை முழுமையாக நிறைவோடு வாழ்கிற
ஒருவனை நீங்கள் அடிமையாக்க முடியாது
வாழ்க்கையை முழு மையாக வாழ்கிறவர்
விழிப்புணர்வுடன்
வாழ்கின்றார்
விழிப்புணர்வு உங்களை மனதுக்கு அப்பால் அழைத்துச் செல்லும்
மனத்தை அடை யாளம் கண்டு கொள் ளாமல் இருங்கள்
' நான் மனமில்லை ' என்ற விழிப்பு நிலை மனதில்
படிந்து விட்டால் மனம் வீரியத்தை இழந்து விடும்
நான்தான் மனம் என்று அடையாளம் காண்பது தான்
மனதிற்கு சக்தி கொடுக்கிறது
நான் மனமில்லை நான் ஒரு விழிப்புணர்வு
என்று உணரும்போது மனம் மடிந்து போகிறது
புத்தர் மகாவீரர் போன்றவர்கள் கனவு காண்பதில்லை
அவர்கள் மனத்தை விட்டு வெகு தூரம் வந்து விட்டவர்கள்
அவர்கள் விழிப்போடு வாழ்கிறார்கள்
விழிப்புணர்வு வளரும் போது
மனம் சிறியதாகிக் கொண்டு வருகிறது
விழிப்புணர்வு முழுமையாகும் போது
முற்றிலும் மனமற்ற நிலை நிலவுகிறது
அதில்தான் மௌனம் தூய்மை தெளிவு இருக்கிறது
ஓஷோ
மருத்துவத்திலிருந்துமனமற்ற நிலை வரை
Tuesday, 10 May 2016
மனமற்ற நிலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.