Saturday, 28 May 2016

அகங்காரமற்று வாழுங்கள் :

அகங்காரமற்று வாழுங்கள் :
துன்பப்பட எல்லோரும் தயாராக இருக்கிறார்கள்.
ஆனால், இன்பத்தை அடைவதில் யாருமே குறியாக இல்லை.
இன்பத்தை அடைவதில் குறியாய் இருங்கள் என்கிறது தந்த்ரா.
இன்பம் நமது அகங்காரத்தை அகற்றிவிடும் இதனால் எல்லா துன்ப நிலைகளும் மகிழ்ச்சிகரமான நிலைகளாக மாற வாய்ப்பு அதிகம்.
துன்பமாயிருக்கும்போதும்,
அகங்காரமாயிருக்கும் போதும் நம்மைச் சுற்றியும் துன்ப அலைகளையே பரவ விடுகிறோம்.
இன்பமாக இருந்தால் துன்பங்கள் அகன்று சொர்க்கம் உங்களை வந்தடையும்.
மகிழ்ச்சியாக இருக்கும்போது நாம் மனமற்ற நிலையில் இருக்கறோம்.
எனவே, கவலைப்படாமல், மேலும் துன்படைய, ஆணவத்துடன் யோசிக்க நம் மனதுக்கு வேலை கொடுக்காமல் இருக்கிறோம்.
அதனால், மகிழ்ச்சியாக நிகழ்காலத்தில் வாழலாம்.
பிரச்சினைகளுக்கும் மகிழ்ச்சியான மனநிலைதான் தீர்வைக் கொண்டுவந்து தரும்.
---ஓஷோ

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.