அட்சயதிருதியை தினத்தன்று தங்க நகைகளோ தங்க நாணயங்களோ வாங்க இயலாதவர்கள் பின்வரும் சூட்சுமப்பரிகாரத்தை செய்யலாம்.சாதாரண சில்லரைக் காசுகளைக் கொண்டே ஒரு வளமான பணவளத்தை உங்களிடம் கொண்டு வரலாம்.
பணம் என்று சொன்னால் இந்த காலத்தில் காகிதத்தால் ஆன கரன்சி நோட்டுகளும் பிளாஸ்டிக்கால் ஆன டெபிட் கார்டு கிரரெடிட் கார்டுகளும் இரும்பால் ஆன சில்லறைக் காசுகளுமே உள்ளன.
இந்த காகிதம் பிளாஸ்டிக் மற்றும் இரும்பிற்கு பணவளத்தை ஈர்க்கும் சக்தி கிடையாது.காகிதத்தில் எந்த மந்திர சக்தியூம் வராது.பிளஸ்டிக் என்பது ஒரு வேதிமம்.அதற்கும் சக்தி கிடையாது.இரும்பாலான காசுகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்.இரும்பிற்கு காரகனான சனிதான் அதனை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பான்.
இதற்கு பதிலாக அந்தக் காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய சில்லரைக் காசுகள் வீட்டில் இருக்கிறதா அல்லது வெளியில் கிடைக்கிறதா என்று பாருங்கள்.செம்பு பித்தளை மற்றும் அலுமினியத்தினால் ஆன (அணாக்கள் ஒரு பைசா இரு பைசா பத்து இருபது பைசா போன்றவை) காசுகள் கிடைத்தால் அதில் ஒன்றையோ ஒன்றுக்கு மேற்பட்டவைகளையோ எடுத்து ஒரு மஞ்சள் துணியில் சுற்றி உங்களது வீட்டில் அல்லது அலுவலகத்தில் உள்ள விநாயகர் முருகனுடன் சேர்ந்திருக்கும் மகாலட்சுமி படத்தின் முன்பாக வைத்து விடுங்கள்.வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்.இது போதும்.வாழ்த்துக்கள்!
Friday, 6 May 2016
பணவளத்தை உங்களிடம் கொண்டு வரலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.