Sunday 15 May 2016

ஓஷோ

***********#ஓஷோ#*********
*********#கேள்வி பதில்#********
#கேள்வி :

ஓஷோ , ' என்னைப் பின்பற்றுங்கள் , கவலையற்று இருங்கள்.

நான் உங்களைச் சுமக்கிறேன் ' என்று ஒருசில மதங்கள் கூறுகிறதே, இது சரியா......???

#பதில் : "சுய சிந்தையற்றவர்கள்தான் ஒருவரை ஆட்டு மந்தையைப் போல பின்பற்றுவார்கள்.

புத்திசாலிகள் தங்களுடைய வழிகளைத் தாங்களே ஏற்படுத்திக் கொள்வார்கள்.

நீங்கள் என்னோடு இங்கு இருந்தால் அது இரண்டு வழிகளில் இருக்கலாம்.

ஒன்று நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தோடு இருக்கலாம்.

அப்பொழுது என்னிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.

ஆனால், நீங்கள் என்னைப் பின்பற்றமாட்டீர்கள்.

நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தின்படியேதான் செல்லுவீர்கள்.

ஆனால் , நீங்கள் ஒரு முட்டாளாக இருந்தால், நீங்கள் என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுவதைப் பற்றி அக்கறை காட்ட மாட்டீர்கள்.

நீங்கள் என்னை வெறுமனே பின்பற்றுவீர்கள்.

இது மிகவும் எளிதானது.

ஆபத்து குறைந்தது.

அதிக பாதுகாப்பு கொண்டது.

ஏனென்றால் உங்கள் பொறுப்பை எப்பொழுதும் என்மேல் சுலபமாகச் சுமத்திவிடுவீர்கள்.

ஆனால் , இது இறப்புக்குச் சமம்தான் ; வாழ்வுக்கு அல்ல.

வாழ்வு அபாயகரமானதுதான்.

புத்திசாலிகள் ஆபத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.

ஏனென்றால், அங்குதான் உண்மையான வாழ்வு இருக்கிறது.

என்னைப் பின்பற்றுங்கள். என் மடியில் இளைப்பாறுங்கள். கவலையை விடுங்கள் '

என்று சொன்னது ஒரு படிப்பறிவு இல்லாத முட்டாள் கூட்டத்துக்குத் தானே ஒழிய,  புத்திசாலிகளுக்கும் , சுயசிந்தனை உள்ளவர்களுக்கும் அல்ல.

ஜீசஸ் போதித்தது படிப்பறிவில்லாத எளிமையான மக்களுக்குத்தான் ; உங்களுக்கு அல்ல......!!!

#கேள்வி : ஓஷோ , எங்களுக்கு நீங்கள் ஒரு மாஸ்டராக இருக்கிறீர்கள். உங்களுக்கு யார் மாஸ்டர்......???

#பதில் : " எனக்கு மாஸ்டர் என்று யாருமில்லை.  இது உண்மை.

இதனால் நான் ஒரு சீடர் இல்லை என்று அர்த்தம் இல்லை.

இந்தப் பிரபஞ்ச உயிர்த்தன்மையையே நான் ஒரு மாஸ்டராக ஏற்றுக்கொண்டுவிட்டேன்.

இதை நீங்கள் ஒரு மாஸ்டராக ஏற்றுக்கொள்ளுவதற்கு உங்களுக்கு மிகுந்த தைரியம் தேவை.

உங்களால் ஒரு மனிதனிடம்கூட அன்பு செலுத்த முடியாவிட்டால் , உங்களால் எப்படி இந்த முழு உயிர்த்தன்மையின் மீது அன்பு செலுத்த முடியும்......???

என்னுடைய சீடத்தன்மை என்பது உங்களுடைய சீடத்தன்மையைக் காட்டிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டது.

நான் இந்த மேகக் கூட்டங்களை நம்புகிறேன்.

ஆனால், இது மிகவும் கஷ்டம்.

நான் இந்த மரங்களை நம்புகிறேன்.

இது பெரும்பாலும் முடியாத காரியம்.

இந்த உலகத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் நம்புகிறேன்.

அன்பு செலுத்துகிறேன்.

இது உங்களால் முடிந்தால் , நீங்கள் ஒரு தனி மனிதனை ஒரு மாஸ்டராக ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.

ஏனென்றால், எல்லாமே உங்களுக்கு ஒரு மாஸ்டராகிறது.

ஆகவே எனக்குப் பல லட்சம் மாஸ்டர்கள் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாஸ்டரும் எனக்கு ஏதோ போதனை செய்கிறார்கள்.

இது உங்களால் முடியாவிட்டால், எப்படியோ, நீங்கள் ஒரு சீடனாக யாரோ ஒருவரிடம் இருப்பது மிகவும் அவசியம்.

எனக்குத் தெரிந்து ரமணருக்கும் ஒரு தனி மாஸ்டர் கிடையாது.

அவரும் என்னைப் போல இந்த இயற்கையையே தன் மாஸ்டராக்கிக் கொண்டவர்.

நான் என்னுடைய சிறு வயதில் அவரைச் சந்திக்க பெரும் ஆவல் உள்ளவனாக இருந்தேன்.

ஆனால் என்னால் அவரைச் சந்திக்க முடியவில்லை......!!!

🌹🌺ஓஷோ 🌺🌹

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.