நீ கண்ட தியானத்தின் அடிப்படை - பகிர்வு
நீ தியானத்தை ருசித்து பழகி விட்டால் , நீ bathroom செல்லும் பொழுது , traffic red light signal ல கிடைக்கும் 5 நிமிட நேரத்தில் கூட உன் கண்களை மூடி கவனிக்க தோன்றும்.
ஆனால் நீ தியானத்தை மேலோட்டமாக பார்க்கும் பொழுது அதர்க்கென்று நேரம் ஒதுக்கவே முடையாகி விடுகிறது.
தியானம் வேறு நீ வேறு, ஆன்மீகம் வேறு உனது வாழ்க்கை வேறு என்ற உனது கண்ணோட்டம் இருக்கும் வரை ஆன்மீகம் மற்றும் தியானத்தின் ருசியை உணர்வது கடினமே,
உன் வேலை வேறு- ஆன்மீகம் வேறு
உன் குடும்பம் வேறு- ஆன்மீகம் வேறு
உன் வேலை வேறு - ஆன்மீகம் வேறு
உனது நட்புகள் வேறு - ஆன்மீகம் வேறு
உன்னை சுற்றி இருக்கும் சமுதாயம் வேறு - ஆன்மீகம் வேறு
மொத்தத்தில் நீ அன்றாட செய்யும் செயல்கள் வேறு ஆன்மீகம் வேறு என பிரித்து பார்க்கும் வேறுபாடு நிலை கொண்ட கண்ணோட்டம் இருக்கும் வரை ஆன்மீகத்தை முழுமையாக உணர்ந்து கொள்வது மேலோட்டமான நிலையில் பெயருக்கு இருப்பது போல தான் இருக்கும்
இது உன் உள் மாற்றத்தை கொண்டு வருவது மிக சிரமமான ஒன்று - ஆற்றில் ஒன்று சேற்றில் ஒன்றை பார்ப்பது போல தான் இருக்கும்.
இந்த நிலையில் இருக்கும் வரை தியானம் செய்ய- நேரம், காலம், சூழ்நிலை, இடம், பொருள், ஏவல் ,என மொட்டைத் தனமான சோம்பேறி தனத்தை உன் மனம் தேடி கொண்டே இருக்கும்
ஆனால் என்று ஒரு நாள் , ஒரு நிமிடத்தில் ,ஒரு நொடி பொழுதில் நீ வேறு- ஆன்மீகம் வேறு இல்லை , நீயும் ஆன்மீகமும் ஒன்றே என்ற அடிப்படையை உணர்ந்து கொள்கின்றாயோ
அந்த நிமிடம் முதல் உனக்கு உள்ளே உயிர்ப்புடன் செயல் பட துவங்கி விடும் உணர்வு உனக்கு உள்ளே வரும்
ஒவ்வொரு செயலிலும் தியானத்தன்மையை உன்னில் நீ உணர்ந்து பார்க்க முடியும் , ஆரம்ப கட்டங்களில் இந்த தியானத்தன்மை அவ்வப்போது வரும் போகும்,
ஆனால் தியானத்தன்மையை நீ இழக்கும் இடங்களை விழிப்புடன் கவனித்து கொண்டே இரு , அது முழுமை தன்மைக்கு மாற்றி அமைத்து கொண்டே செல்லும்.
இந்த அடிப்படையை தான் மகரிஷி அவர்கள் ஒவ்வொரு செயலிலும் இறை உணர்வை காணுங்கள்- இறை எங்கும் எதிலும் நீக்கமற இணைந்துள்ளன என்கிறார்,
ஓஷோ எனது தியானம் மூச்சுடன் இணைந்துள்ளது , மூச்சு வேறு நீ வேறு இல்லை - மூச்சுடன் இணைந்தவன் நீ என்கிறார்,
நடப்பது - கை அசைப்பது என ஒவ்வொரு அசைவுகளிலும் விழிப்புணர்வுடன் தியானத்தை பார் என்கிறார் .
உன்னை முழுமையாக எந்த வித குற்ற உணர்வு இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் உணர்வு வரும் பொழுது தான் இந்த மாறியான தியானத் தன்மையை உனக்கு உள்ளே உணர முடியும்.
தியானம் தான் உன்னை முழுமை படுத்தும்
தியானம் தான் வாழ்வு - வாழ்க்கையே தியானம் தான்.
இந்த எழுத்துக்களை படிக்கும் பொழுது ஒரு வித கற்பனையைக் உனது மனதுக்கு கொடுத்து விடும்
இந்த கற்பனை இல்லாமல் அதில் இருக்கும் உணர்வுகளை உணர்ந்து உன் இயல்பில் நோக்கம் இல்லாமல் தியானத்தை செய்,
அப்பொழுது தான் உண்மையான தியானத்தை உணர முடியும்,
தியானி
தியானி
எண்ணங்கள் கடந்த வெற்றிடத்தை உணர்ந்து அதை விரிவு செய்து கொண்டே இரு இது தான் முழுமையான தியானத்தின் அடிப்படை - இதுவே நீடித்த நிலைத்த சந்தோஷத்தை உனக்கு உள்ளே எப்பொழுதும் குறைவின்றி கொடுக்கும்.
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழு!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.