Friday, 6 May 2016

தியானம் என்பது

தியானம் என்பது உங்களை உங்களிடமே முழுமையாகச் சேர்ப்பது.
கடவுளின் பெயரால், நீங்கள் உண்டாக்கிக் கொண்ட அனைத்து பொறுப்புகளையும்,அது உங்களிடமிருந்து அப்புறப்படுத்தி விடுகிறது.
மனித குலத்திற்கு கடவுள் கொள்கை என்பது ஒரு ஆசிர்வாதம் இல்லை.
அது ஒரு மிகப்பெரிய சாபக்கேடு.
முதலில் கடவுளிடமிருந்து விடுதலை பெறுங்கள்.
நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்திற்கும் நீங்கள்தான் பொறுப்பு.
கடவுள்தான் இந்த உலகத்தைப் படைத்தது என்றால், இந்த உலகத்தில் நடப்பவை அனைத்திற்கும் அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.
கடவுள்தான் மனிதனை உண்டாக்கினார் என்றால், அவனுடைய அழிவு உணர்வு தீமை செய்தல் மற்றும் அவனுடைய பேராசை, கோபம், கற்பழிப்பு, கொலை செய்யும் உணர்வு, தற்கொலை போன்ற அனைத்து அருவருப்பான செயல்களையும் அவரேதான் உண்டாக்கியிருக்க வேண்டும்.
சகல நன்மை, தீமைகளுக்கும் அவரேதான் பொறுப்பேற்க வேண்டும்.ஏனெனில், அந்தத் தீங்கான விதையை உங்களிடம் விதைத்தவர் அவர்தான்.
அந்தச் செயல்களுக்குப் பொறுப்பு நீங்களல்ல.......!!!
நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா.......???
கடவுள் உங்களைப் படைத்திருந்தால், 'அந்தக் கடைசி தீர்ப்பு நாளில்'அவர் உங்களிடம் "நீங்கள் ஏன் போதை மருந்துக்கு அடிமையானீர்கள்?" என்று கேள்வி கேட்கக்கூடும்.
அப்பொழுது நீங்கள் அவருடைய கழுத்தைப் பிடித்துக்கொண்டு, "அந்த உணர்வை என்னிடம் உண்டாக்கியது நீங்கள்தானே.....???
அதற்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை!" என்று தைரியமாகக் கூறவும்.
எப்பொழுது கடவுள் ஆகாயத்தில் இல்லையோ, அப்பொழுது உங்களுடைய ஒவ்வொரு மூச்சுக்கும், ஒவ்வொரு செயலுக்கும், ஒவ்வொரு நோக்கத்திற்கும், நீங்களே பொறுப்பாகிறீர்கள்.
கடவுள் வெறும் பொம்மலாட்டக்கார
ன்தான்.
ஆகவேதான், கடவுளின் கொள்கைகளுக்கும் இந்த உலகச் செயல்களுக்கும் தொடர்பு இருக்கிறது.
கடவுள் கொள்கை மனித குலத்திற்கு ஒரு ஆசிர்வாதம் இல்லை.
அது ஒரு சாபக்கேடு.
ஆகவே, நீங்கள்தான் எப்பொழுதும் புத்தி கூர்மையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட்டவாறு, அடுத்தவர்களுக்க
ு எந்தக் காரணத்தைக் கொண்டும் தீங்கு செய்யாமல், அடுத்தவர்களின் சுதந்திரத்தில் தலையிடாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
யாரும் யாருக்கும் அடிமை கிடையாது.
ஆகவே, எவர் மீதும் அதிகாரம் செய்யாதீர்கள்.
எவர் பேரிலும் உரிமை கொண்டாடாதீர்கள்.
~~ஓஷோ~~

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.