🍂🖋ஆனந்தவேதம்✍🏻🍃
116 - உன் பதில் என்ன ?!?
*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"
ராதேக்ருஷ்ணா...
நீ யார் ?
ப்ரும்மதேவரின் பதில்
"நான் நாராயணனின் கருவி"
சிவபெருமானின் பதில்
"நான் அச்சுதனுக்கு ப்ரியமானவன்"
விஷ்வக்சேனரின் பதில்
"நான் நாராயணனின் காரியதரிசி"
ஆதிசேஷனின் பதில்
"நான் பகவானின் படுக்கை"
கருடாழ்வாரின் பதில்
"நான் பகவானின் வாஹனம்"
ப்ரஹ்லாதனின் பதில்
"நான் நாராயணனின் குழந்தை"
ஆஞ்சனேயரின் பதில்
"நான் ராமனின் வேலைக்காரன்"
பரதனின் பதில்
"நான் ராமனின் சொத்து"
சுக்ரீவனின் பதில்
"நான் ராமனின் நண்பன்"
விபீஷணனின் பதில்
"நான் ராம பக்தன்"
ஜடபரதரின் பதில்
"நான் ஆத்மா"
யசோதையின் பதில்
"நான் க்ருஷ்ணனின் அம்மா"
நந்தகோபரின் பதில்
"நான் க்ருஷ்ணனின் அப்பா"
கோபியின் பதில்
"நான் க்ருஷ்ணனின் அடிமை"
கோபனின் பதில்
"நான் க்ருஷ்ணனின் நண்பன்"
ராதிகாவின் பதில்
"நான் க்ருஷ்ணனின் சொத்து"
அர்ஜுனனின் பதில்
"நான் க்ருஷ்ணனின் சிஷ்யன்"
தாருகனின் பதில்
"நான் க்ருஷ்ணனின் ரதசாரதி"
குசேலரின் பதில்
"நான் க்ருஷ்ணனின் பால்ய சினேகிதன்"
மதுரகவி ஆழ்வாரின் பதில்
"நான் ஸ்வாமி நம்மாழ்வாரின் மீளா அடிமை"
குலசேகர ஆழ்வாரின் பதில்
"நான் அடியவரின் அடியவர்க்கு,
அடியவரின் அடியவர்க்கு,
அடியவரின் அடியவர்க்கு அடியேன்"
ஆண்டாளின் பதில்
"நான் ரங்கனின் காதலி"
திருமங்கையாழ்வாரின் பதில்
"நான் நாயினும் தாழ்ந்தவன்"
விப்ரநாராயணரின் பதில்
"நான் தொண்டர் அடிப் பொடி"
மஹாராஜா ஸ்வாதித்திருநாளின் பதில்
"நான் பத்மநாப தாஸன்"
வடுக நம்பியின் பதில்
"நான் ராமானுஜரின் பக்தன்"
சனாதன கோஸ்வாமியின் பதில்
"நான் ராதிகாவின் தாஸி"
கூரத்தாழ்வானின் பதில்
"நான் ராமானுஜரின் சொத்து"
கதாதரபட்டரின் பதில்
"நான் ப்ருந்தாவன வாசி"
இப்பொழுது உன்னிடம்
இந்த கேள்வி !
நீ யார் ?
சொல் !
தெரியவில்லையென்றால் யோசி !
மீண்டும் ஒரு முறை
படித்துப் பார் !
பின் சொல் !
நீ யார் !
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.