Tuesday 10 May 2016

இயல்பு நிலையை திறக்கும் திறவுகோல

வெளியே உற்று நோக்குகையில் வெறுமையே தெரிந்தால்
அப்பொழுது மனத்தால் மனதைக் கவனித்தால் "
உங்களிடம் இருப்பு நிலையாகிய ஆகாயம் உள்ளது
கண்களை மூடி வேறு எதற்காகவும் காத்திராமல் உள்ளே நோக்குங்கள்
எண்ணங்கள் அங்கு பரவிக் கிடந்தாலும் அவற்றைக் கவனிக்காதீர்கள்
அப்பொழுது எண்ணங்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளை நோக்குங்கள்
போகப் போக எண்ணங்கள் இருக்கும்போதே இடைவெளிகளைத் தொடர்ந்து காண முடியும்
அப்பொழுது எண்ணங்களுக்கு பின்னால் மறைந்து கிடக்கும் ஆகாயம் போன்ற இருப்பு நிலை புலப்படும்
இத்தகைய காட்சிக்குப் பழக்கப் பட்டு விட்டால் எண்ணங்கள் படிப்படியாக நீங்க ஆரம்பிக்கும்
இடைவெளிகளின் அகலம் அதிகமாகும்
பல நிமிடங்களுக்கு எண்ணங்கள் தோன்ற மாட்டா
வெறும் அமைதி தெரியும் எல்லாமே ஆனந்தமாகத் தெரியும்
வேறுபாடுகள் மறையும்
நீங்கள் அப்போது இயல்பை உணரலாம்
இயல்பு நிலை என்பது
விழிப்புணர்வின் மிக உயர்ந்த நிலையாகும்
அப்போது இருமை மறைந்து ஒருமை மட்டுமே எஞ்சி நிற்கிறது
வானத்தில் அலைந்து திரியும் மேகங்களுக்கு வேரில்லை புகலிடம் இல்லை
மனதில் மிதக்கும் எண்ணங்களுக்கும் அப்படியேதான்
தியானிக்க வேண்டும் என்ற முயற்சியும் ஒரு எண்ணம்தான்
இயல்பு நிலையை அடைய வேண்டும் என்பதும் ஒரு எண்ணம்தான்
ஓர் எண்ணத்தை மற்றோர் எண்ணத்தால் எவ்வாறு நிறுத்த முடியும்
வெறுமனே எண்ணங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் சாட்சியாய் இருங்கள்
அப்பொழுது அவை தானாகவே நின்று போகும்
நமக்குள் விழிப்புணர்வு அதிகமாக அதிகமாக நம் முயற்சி எதுவுமின்றி அவை நின்று போகும்
நாம் எண்ணங்களை தடுக்க நினத்தால் அவை இருந்து கொண்டேயிருக்கும்
எண்ணங்களை மதிப்பீடு எதுவும் செய்யாமல் நோக்காமல் நோக்க வேண்டும்
இவ்வாறு நோக்க நோக்க எண்ணங்கள் மறையும்
இயல்பு நிலையை திறக்கும் திறவுகோல் இதுதான்.
அதுதான் மனமற்ற, வெறுமையான, உணர்வற்ற, சைதன்யநிலை.!!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.