Wednesday, 4 May 2016

விஞ்ஞான் பைரவ் தந்த்ரா

தந்த்ரா
---------
உலகம்
---------
விஞ்ஞான் பைரவ்
தந்த்ரா
விஞ்ஞான் -உணர்வு
பைரவ்-கடந்த நிலை
தந்த்ரா-யுக்தி
விஞ்ஞான் பைரவ் தந்த்ரா என்பது உணர்வை கடந்து செல்லும் யுக்தியாகும்
சூத்திரம்
ஓ சிவனே!நீ உண்மையில் என்ன?
இந்த கேள்வி அன்பின் வெகு தீவிரமான தருணத்தில் கேட்கப்பட்ட கேள்வி
சிவன் அரூபமாகிவிட்டார்
அன்பு சிகரத்தை எட்டும்போது அன்பிற்கினியவர் மறைந்து போகிறார்
அன்பு ஒருவனை, தன்னைத் தனக்குள்ளே பார்ப்பதைப் போல் பார்க்கிறது
"ரின்ஜாய்" என்ற ஜென் துறவி ஞானமடைந்தார்
உடனே அவர் என் உடம்பு எங்கே என்று தேட ஆரம்பித்து விட்டார்
அவர் அரூபத்தினுள் நுழைந்து விட்டார்
அன்பில் நீ அடுத்தவரிடம் அவராகவே புகுகிறாய் நீ நீயாக புகுவதில்லை நீ ஒன்றி விடுகிறாய்
சிவலிங்கம் என்பது ஒரு அரூப வடிவமே அது ஒரு பிரகாச இருப்பு மட்டுமே ஒரு ஒளி வடிவம் மட்டுமே
வியப்பு நிறைந்த இந்தப் பேரண்டம் யாது?
நாம் பேரண்டத்தை அறிவோம் ஆனால் அதை வியப்பு நிறைந்ததாக நாம் ஒருபோதும் அறியோம்
விழிகளில் வியப்பு நிறைந்திருக்கும் போது பேரண்டத்திலும் வியப்பு நிறையும்
நீ நேசிக்கும்பொழுது, நீ மறுபடியும் குழந்தையைப்போல்
ஆகிறாய்
இதைத்தான் ஜீஸஸ் சொல்கிறார் "குழந்தை போன்று இருப்பவர்கள் மட்டுமே எனது கடவுளின் ராஜ்ஜியத்தில் நுழைய முடியும்"
உன் விழிகளில் வியப்பு நிறைந்திருக்கும்
போது இப்பேரண்டம் அறிய முடியாததாக ஒரு அவிழ்க்க முடியாத புதிராக மாறுகிறது
நீ அன்பில் ஆழத்திற்கு நெருக்கமான அன்பு உலகத்திற்கு நுழையும்பொழுது உருவம் மறைகிறது
உருவங்கள் அரூபங்களாக எல்லையற்று மாறி விடும் போது இந்த முழு பேரண்டமும் ஒருமையாக மாறுகிறது
அப்போதுதான் அது வியப்பு நிறைந்த பேரண்டமாகிறது
ஓஷோ

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.