*சுபிட்சம் தந்தருளும் சுக்கிரவாரப் பிரதோஷம்!*
பிரதோஷம்... சோம வாரத்தில் அதாவது திங்களிலும் சனிக்கிழமையிலும் வருவது விசேஷம். அதேபோல், குருவாரம் எனப்படும் வியாழக்கிழமையில் பிரதோஷம் வருவது ஞானத்தை வழங்கக்கூடியது. இதில் சுக்கிரவார பிரதோஷமும் மகத்துவம் வாய்ந்தது. வெள்ளிக்கிழமையை சுக்கிரவாரம் என்பார்கள். இன்று சுக்கிரவாரம். வெள்ளிக்கிழமை.
இந்த நாளில், பிரதோஷம் அமைந்திருக்கிறது. வெள்ளிக்கிழமையில், மாலை வேளையில் கோயிலுக்குச் செல்வது புண்ணியம். அதிலும் பிரதோஷ பூஜையைத் தரிசிப்பது பெரும்புண்ணியம். இந்தவேளையில்... பிரதோஷத்தில்... சிவதரிசனம் செய்யுங்கள். நந்திதேவரை தரிசியுங்கள். அம்பாளுக்கு அரளிமாலை வாங்கி சார்த்துங்கள்.
முடிந்தால் ஸ்ரீதுர்காதேவிக்கு விளக்கேற்றி, அரளி சார்த்தி வழிபடுங்கள். சுக்கிரவார பிரதோஷ தரிசனம்... உங்கள் வீட்டில் சுபிட்சத்தை வாரி வழங்கும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். அடகில் இருந்த ஆபரணங்களை மீட்பீர்கள். சகல ஐஸ்வரியங்களுடன் வாழ்வீர்கள்.
இந்த அற்புதமான நாள்... நரசிம்மருக்கும் உகந்தது. ஒரு பிரதோஷ வேளையில்தான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது. அருகில் உள்ள நரசிம்ம ஆலயத்துக்கோ முக்கியமாக... லக்ஷ்மி நரசிம்மர் தரிசனம் தருன் கோயிலுக்கோ சென்று, வழிபடுங்கள். லக்ஷ்மி கடாக்ஷத்துடன் இனிதே வாழ்வீர்கள்!
_
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.