Friday 24 June 2016

பஞ்ச நந்திபெருமான


பஞ்ச நந்திபெருமான் பற்றிய தகவல்கள்

 பெரிய சிவாலயங்களில் ஐந்து வகையான நந்திகள் அமைந்திருப்பதைக் காணலாம். அவை இந்திர நந்தி, வேத நந்தி (பிரம்ம நந்தி), ஆத்ம நந்தி (கொடி மரத்தின் அருகில் உள்ளது), மால்விடை (மகாமண்டபத்தில் இருப்பது), தரும நந்தி என்பவையாகும்.

இந்திர நந்தி :

✫ ஒரு சமயம் இந்திரன் இடப (காளை) வடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கினான். போகங்களின் அதிபதியாகிய, இந்திரன் வடிவாக விளங்கும் இந்த 'நந்தியைப் போகநந்தி" என்றும், 'இந்திர நந்தி" என்றும் அழைக்கின்றனர;. இந்த நந்தியைக் கோயிலுக்கு வெளியே சற்று தொலைவில் கருவறையை நோக்கியவாறு அமைக்கின்றனர;.

வேத நந்தி :

✫ பின்னர; ஒருமுறை பிரம்மதேவன் நந்தி வடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கினான். வேதனான பிரம்மன், நந்தி வடிவம் தாங்கியமையால் இந்த நந்தியை 'வேத நந்தி", 'வேத வெள்விடை", 'பிரம்ம நந்தி" என்று பல பெயர;களால் அழைக்கின்றனர;. பிரம்மம் என்பதற்கு அளவிட முடியாத பெருமைகளை உடையது என்பது பொருளாகும். அதற்கேற்ப இந்த நந்தியை மிகப்பெரியதாகவும், கம்பீரமாகவும் அமைப்பர;.

ஆன்ம நந்தி :

✫ ஆலயத்தில் கொடி மரத்தையொட்டி தலைமை நந்தியாக அமையும் நந்தி 'ஆன்ம நந்தி" ஆகும். இது உலக உயிர;களான (பசுக்கள்) ஆன்மாக்கள் பதியாகிய சிவபெருமானைச் சார;ந்து, அவருடைய நினைவில் நிலைப்பெற்றிருக்க வேண்டிய தன்மையை உணர;த்துகிறது. சிவாலயத்தில் பிரதோஷக் காலங்களில் இந்த நந்திக்குத்தான் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.

மால் விடை :

✫ ஒரு சமயம் திரிபுராதிகளை வெல்லுவதற்காக தேவர்கள் சிவபெருமானுக்கு சிறந்ததொரு தேரினைச் செய்து கொடுத்தார;கள். தாங்கள் அளிக்கும் இந்தத் தேர; இல்லாமல் சிவபெருமானால் முப்பு�

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.