Tuesday 21 June 2016

பேரின்பத்தை உணர

🌷பேரின்ப முழுமை -பகிர்வு 🌷

பேரின்பத்தை உணர
உன்னை நீயே முழுமையாக ஏற்றுக்கொள்

ஓரு மரம் இருக்கிறது அதை எப்படி பார்க்கிறாய் என்று பார்த்தால் - அதை  வைக்கும் பொழுதே - இதை வைத்தால் எவ்வளவு நாளில் வரும்? , இது வளர்ந்த பின் காய்- கனி வருமா?, வளர்ந்த பின்னர் நிழல் கொடுக்குமா?, இந்த மாறியான  ஒரு பத்து மரங்களை வைத்தால் சமுதாயத்தில் என்ன அங்கீகாரம் பேர்  கிடைக்கும் என்ற தன்மையும்

வளர்ந்த பின் அதில் ஒரு ஓரத்தில் வாடி கிடந்தால் அதை சளித்து கொள்வது  , அல்லது காய் - கனி காய்க்க வில்லை என்ற உடன் அதை வெறுப்பது , சரியான உயரம் - அகலம்  வளர்ச்சி இல்லாத சூழ்நிலையில் பார்க்கும் பொழுது ஏற்படும் தன்மைகள்

இதெல்லாம் இயல்பாக மனம் என்ற அடிப்படையில் வரக்கூடிய யதார்த்தமான மனநிலையே - ஆனால் இதை கொண்டு நீ  அந்த மரத்தை முழுமையாக நேசிக்க செய்கிறாய் - முழுமையாக ஏற்றுக்கொண்டேன்  என்று முட்டாள் தனமாக எடுத்துக்கொள்ளாதே - உண்மையில் அங்கு நேசிப்பு நிகழவில்லை மாறாக மரத்திடம் ஆதாயம் - மற்றும் உனது அடையாளங்கள் தேடிக் கொண்டிருக்கிறாய் அவ்வளவே இதுவும் இயல்பு தான் !

ஓரு மரத்தை நீ நேசிக்கவே ஆரம்பிக்கவில்லை என்பது தான் உண்மை !

உனக்கு மரத்தின் மேல  நீண்ட எதிர்பார்ப்பு கொண்டு செயல் படுவது- உனக்கும் அந்த மரத்துக்கும் உள்ள உணர்வுகள்  நீண்ட இடைவெளியில் தான் இருக்கும் - இதனால் உனது அடி ஆழத்தில் இருக்கும் முழு சந்தோஷத்தை நீ பெற்று விட முடியாத ஒன்றே

எப்பொழுது ஒரு மரத்தின் அடி வேறில் இருந்து- வாடிய இழைகள் முதல் கொழுந்து நிற்கும் பச்சையாக இருக்கும் இழைகள் வரை - கீழே இருந்து மேலே வரை அதை ஏற்றத்தாழ்வு இல்லாத  முழுமையாக  ஏற்றுக்கொள்கின்றாயோ - அப்பொழுது தான் அந்த மரத்தை நீ நேசிக்க தொடங்குகிறாய் - அங்கிருந்து தான் உனக்கும் அந்த மரத்துக்கும் முழுமையான நட்புறவு கொண்ட அன்பு மலர்கின்றது

இது போல தான் நீ உன்னை முழுமையாக உன்னை நேசிக்காமல் - உனது குணங்களை கொண்டு உனது குணங்களை ஒப்பீடு செய்து கொண்டும்

உன்னுள் நீ உனக்கே ஆதாயம் தேடிக் கொள்கிறாய், உன் மீது உனக்கே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு வைத்துக் கொள்கிறாய், அதன் படி ஒவ்வொரு நொடியிலும் உனது எதிர்பார்ப்புக்கும் - நிகழ கூடிய சூழ்நிலைக்கும் சம்மந்தம் இல்லாமல் சிக்கித் தவித்து கொள்கிறாய் - சலிப்பை பெறுகிறாய்!

உன்னை சதா நேரமும் உன்னை சார்ந்த நபர்களுடன் ஒப்பீடு செய்து கொண்டிருக்கிறாய் !

இது எல்லாம் இயல்பாக வரும் மனதின் தன்மை  தான் - ஆனால் இது உனக்கு முழு சந்தோஷத்தை கொடுப்பது இல்லை

ஏனெனில் இது உனக்கும் உன் உள் இருப்புக்கும்- நீ நீண்ட இடைவெளி கொண்ட எதிர்பார்ப்பை சுமந்து கொண்டே உருவாக்கி  செல்கிறாய் -அது தான் உனது பிரச்னையே

உண்மையில் உனது கால் நுனி முதல் உனது தலை முடி வரையில் உள்ள உடலையும் , உனது குணங்களான (கோபம் -காமம் -பேராசை - மகிழ்ச்சி -பொறாமை - பேரின்பம் - உதவிகள்) என எந்த ஒன்றையும் எண்ணங்கள் மூலம் எழும் தன்மைகளை  அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலை வரும் பொழுது தான்- முழுமை என்ற நிலைக்கு அடி எடுத்து வைக்கிறாய்

இந்த முழுமை ஏற்பு நிலையில் தான் எண்ணங்கள் கொண்ட சேர்ப்பின் அடிப்படையில் உனது குணங்களை - நீ என்னவென்று பார்க்கும் பக்குவம் வருகிறது

இந்த நிலையில் நீ ஒவ்வொரு குணத்தையும்- எண்ணங்களையும் -நீ இயல்பாக புரிந்து கடக்கும் பக்குவம் ஏற்படுகின்றது

அந்த கடக்கும் நிலையில் உன் இருப்புக்கும்- உனக்கும் இருக்கக் கூடிய எதிர்பார்ப்பு இடைவெளி குறைகிறது

அங்கு உன் இருப்பின் முழுமையை தொட முடிகிறது !

அங்கு உனது முழுமையான பேரின்ப உணர்வை பெற முடிகிறது - உன்னை நீயே ஏற்றுக்கொள்ளும் முழு நேசிப்பு மலர்கின்றது

இந்த நிலையில் உன்னை போலவே பிற உயிரையும் முழுமையாக நேசிக்கும் உணர்வு உனது இயல்பில் இருந்து  மலர்கின்றது

இதற்கு தியானமே முழு உதவியாக இருக்கிறது - அதன் சக்தி குவியல் தான் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்க்கின்றது

உன்னை நீ முழுமையாக ஏற்றுக்கொள் - வாழ்வு பேரின்பமே

நன்றி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.