பத்திரகாளி அம்மனின் மக்கள்:
1. வீரபத்திரன்
சிவனின் வியர்வைத்துளியில் பிறந்த வீரபத்திரன், பத்திரகாளி அம்மனின் போர்ப்படை தளபதி ஆவார். பத்து தலை, இருபது கையினை உடையவர். சிவனால் உருவாக்கப்பட்டு, அம்மனுக்காக கொடுக்கப்பட்டவர்.
2. வேதாளை பூதத்தான்...
தேவர்கள் அமுதம் கடையும் போது, எட்டாவது நாள் பிறந்தவன் கட்டழகன் வேதாளை. அவனது உருவம் ராட்சசன் போல இருந்ததால் அவனை தேவர்கள் காட்டானை பர்வாதம் என்னும் வனத்தில் கட்டி வைத்தனர். பத்திரகாளி அம்மன் தாருகனை வதம் செய்ய பூதப்படைகளுடன் கிளம்பும் போது, கடல் தடையாக இருந்தது. கடல் கடந்து போக அவர்களுக்கு ஒரு பாலம் தேவைப்பட்டது, எனவே வேதாளையை வரவழைத்து அதன் நாக்கால் பாலமிட்டு, தாருகன் கோட்டை பத்திரகாளி தன் படையுடன் சென்றார். தனக்கு உதவிய வேதாளையை தன் மகனாக ஏற்றுக் கொண்டார்.
3. வண்டி மலையன்
தாருகன் சிவபெருமானிடம் ஒரு வரம் வாங்கியிருந்தான். அதன்படி அவனது இரத்தம் ஒருதுளி நிலத்தில் விழுந்தால் அதிலிருந்து 9 அசுரர்கள் தோன்ற வேண்டும் என்பது ஆகும். பத்திரகாளி அம்மன் தாருகனை, வேதாளையின் நாக்கில் வைத்து கொன்று, அவனுடைய இரத்தம் நிலத்தில் சிந்தாதபடி ஒரு வண்டியில் கட்டி புட்டாபுரத்திற்கு பயணப்படும்போது, வண்டியில் இருந்து ஒருதுளி இரத்தம் கீழே இருக்கும் நாக்கு பாலத்தில் சிந்தியது. அதிலிருந்து மலை போன்ற உருவத்தில் ஒரு அசுரன் தோன்றினான். அம்மன் அவனை தன் மகனாக ஏற்றுக்கொண்டு வண்டிமலையன் என்று பெயரிட்டாள்.
4. வைரவநாதன்
தாருகனை கொன்றுவிட்டு பத்திரகாளி அம்மன் கைலாசத்திற்கு சென்று, சிவபிரானிடம் வரம் வாங்கலாம் என கிளம்பினார். அம்மை இரத்த வாடையுடன் வந்து கொண்டிருந்ததால் அவாளுக்கு மாமிச பசி இருக்கிறதா என்பதை அறிய வேண்டும் என்று நாராயணன், ஒரு பொன்வண்டை பிடித்து ஒரு குழந்தையாக மாற்றி, அம்மை வரும் வழியில் போட்டார், அம்மைக்கு மாமிச பசி இல்லாததால் அந்த குழந்தையை எடுத்து வந்து சிவபெருமானிடம் கொடுத்தாள். சிவன் அக்குழந்தைக்கு வைரவநாதன் என பெயரிட்டு பத்திரகாளியிடம் ஒப்படைத்தார்.
கோவில்களில் பத்திரகாளி அம்மனின் பீடத்திற்கு எதிரில் இருக்கும் பீடங்களுக்கு பொதுவாக 4 படையல்கள் போடப்படும். அந்த 4 படையல்களும் அம்மனின் 4 பிள்ளைகளுக்கும் உரியது...
Share to all
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.