Tuesday 21 June 2016

செவ்வாய் கிழமை

🌀 *பகுளம்* எனப்படும் *பிரதமை*த் திதியும் *செவ்வாய் கிழமை*யும் கூடும் நன்னாள் 🌀

⚛பிரதமைத் திதி நாளை “ *எழழுகதிர் ஏற்ற சக்தி*” நாள் எனச் சித்தர்கள் உரைக்கின்றனர். 

⚛இந்நாளில் சூரிய, சந்திரர் இரு கிரகக் கதிர்களும் ஏற்றம் கொள்கின்றன.
☄இச்சக்திகளே, சித்சுத்தியைப் பவித்ரமானதாக, புனிதமானதாக ஆக்கித் தருவதாகும்.

⚛சித்சுத்தி என்பது *மனம், உடல், உள்ளம்* மூன்றுமே பரிசுத்தமாக விளங்குவதாகும்.

⚛பகுள சக்திகள் நிறைந்த பிரதமை நாளில்,
☄பழையதைப் புதியதாக்கும் பவித்ரமான “எழுகதிர்” சக்திகள் தோற்றுவிக்கப்படுகின்றன. 

⚛தேய்பிறைத் திதிகளில் *மருத்துவ குண சக்திகள் நன்கு வீரியமும், விருத்தி*யும் பெறுகின்றன.

⚛ *கர்ம வினைக் கழிவடைய* உதவும் *சுத்திகர சக்திகள்* தேய்பிறையில்தான் நன்கு ஆக்கம் கொள்கின்றன. 

⚛செவ்வாயும் பகுளமான பிரதமைத் திதியும் சேர்வது *மருத்துவ சக்திகளை நன்கு விருத்தி செய்து தரும்*. 

⚛“ *அங்காரக பகுளம்*” என்பது
☄செவ்வாய் மண்டலத்தில்
☄அக்னியையே புனிதப் படுத்துகின்ற விசேஷமான அக்னி சக்தி மண்டலத்தைக் குறிப்பதாகும்.

⚛ செவ்வாயும், பிரதமைத் திதியும் கூடும் நாளில்,
☄அக்னி மூர்த்திக்கு
☄எட்டு விதமான மூலிகா திரவியங்களை, அஷ்ட கந்த மூலிகைகளால் அபிஷேக, அர்ச்சனை, ஆராதனைகள் ஆற்றுவது,
☄ தீ சம்பந்தமான விபத்துகள், ஆலயத்திலும், குடும்பத்திலும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள உதவும். 

⚛ *ஸ்ரீஅக்னீஸ்வரர், தீப்பாய்ந்த நாச்சியார் மூர்த்தி* போன்று
☄அக்னி வகைப் பெயரைத் தாங்கி வரும் மூர்த்திகளை இந்நாளில் வழிபட்டு,
☄வாழ்வில் நெருப்பைத் தவறான முறைகளில் பயன்படுத்திய தோஷங்களுக்கு,
☄ நெருப்பை மிதித்த தோஷங்களுக்கு,
☄முறையாக விளக்கை ஏற்றாதது,
☄முறையாக விளக்கைச் சாந்தப்படுத்தாதது போன்ற தோஷங்களிலிருந்து தீர்வுகளைப் பெற
☄பிரதமைத் திதியில் அக்னி மூர்த்தி வழிபாடு விசேஷமான பலன்களைத் தரும். 

💢
*மாசில் வீணையும் மாலை மதியமும்*

*வீசு தென்றலும் வீங்கிள வேணிலும்*

*மூசு வண்டறை பொய்கையும் போன்றதே*

*ஈசன் எந்தை இணையடி நீழலே!*
💢

- என்ற *அப்பர் சுவாமிகளின் தேவாரப் பாடலை*,
☄விளக்குத் தீபத்தைத் தரிசித்தவாறு, 1008 முறை ஓதுதல்,
☄அக்னி பகவானைப் பூஜித்த பலாபலன்களைப்
☄பித்ருக்களின் ஆசியாக ஓரளவு பெற்றுத் தரும். 

⚛இந்நாளில் தக்க வான சாத்திர முறைகளுடன் செவ்வாய்க் கிரகத்தையும் வானில் தரிசிக்க முயற்சி செய்திடுதலும் சிறப்பு.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.