குருச்சேத்திரப் போர் பிரம்மாண்டமான போர் வியுகங்கள்
40 லட்சம்பேர் பங்குபெற்ற 18 நாட்கள் நடந்த மிகப் பிரமாண்டமான மகாபாரதப் போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியுகங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.இதை பிரமாண்டமான திரைப்படமாக எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்!
1.கிராஞ்ச வியுகம் (heron formation)
2.மகர வியுகம் (crocodile formation)
3.கூர்ம வியுகம் (tortoise or turtle formation)
4.திரிஷுல வியுகம் (trident formation)
5.சக்ர வியுகம் (wheel or discus formation)
6.கமலா வியுகம் or பத்மா வியுகம் (lotus formation)
7.கருட வியுகம் (eagle formation) (மாவீரன் கர்ணனின் வியுகம்)
8.ஊர்மி வியுகம் (ocean formation)
9.மண்டல வியுகம் (galaxy formation)
10.வஜ்ர வியுகம் (diamond or thunderbolt formation)
11.சகட வியுகம் (box or cart formation)
12.அசுர வியுகம் (demon formation)
13.தேவ வியுகம்(divine formation)
14.சூச்சி வியுகம்(needle formation)
15.ஸ்ரிங்கடக வியுகம் (horned formation)
16.சந்திரகல வியுகம் (crescent or curved blade formation)
17.மலர் வியுகம் (garland formation)
18.சர்ப வியுகம் (snake formation)
குருசேத்திரப் போரின் போது பாண்டவர் தரப்பில் 7 அக்குரோணி படைகளும், கௌரவர்கள் தரப்பில் 11 அக்குரோணி படைகளுமாக 18 அக்குரோணி படைகள் பங்கெடுத்தது. ஒரு அக்குரோணி என்பது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109350 படை வீரர்களையும் உள்ளடக்கியது
படைப்பிரிவுகளின் கணக்கு
படைப்பிரிவுகள் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன: ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஐந்து படைவீரர்கள் கொண்ட பிரிவு, ஒரு பட்டி எனப்படும்.
3 பட்டிகள் கொண்டது 1 சேனாமுகம்
3 சேனாமுகங்கள் கொண்டது 1 குல்மா
3 குல்மாக்கள் 1 கனம்
3 கனங்கள் 1 வாகினி
3 வாகினிகள் 1 பிரிதனா
3 பிரிதனாக்கள் 1 சம்மு
3 சம்முக்கள் 1 அனிகினி
10 அனிகினிக்கள் 1 அக்குரோணி
குருசேத்திரப்போர் படை விபரங்கள்
குருசேத்திரப் போரில் கௌரவர்களுக்குச் சார்பாக அஸ்தினாபுரத்துப் படைகளும் அவர்களுக்கு ஆதரவான பிற படைகளுமாகப் 11 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலும், பாஞ்சாலம், விராடம், போன்ற பல்வேறு அரசுகளின் படைகளை உள்ளடக்கிய பாண்டவர்களுக்குச் சார்பான 7 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலுமாகப் போரிட்டன.
கௌரவர் தரப்புப் படைகள்
துரியோதனன் தரப்பில் போரிட்ட படைகள்:
பாகதத்தன் படைகள் - 1 அக்குரோணி
சல்லியனின் மதுராப் படைகள் - 1 அக்குரோணிகள்
பூரிசுவரர்கள் - 1 அக்குரோணி
கிருதவர்மன் (கிருஸ்ணனின் நாராயணிப் படைகள்) - 1 அக்குரோணி
சயத்திரதன் படைகள் - 1 அக்குரோணி
காம்போச அரசன் சுதகசினனின் படைகள் - 1 அக்குரோணி
விந்தன், அனுவிந்தன் என்போரின் அவாந்திப் படைகள் - 1 அக்குரோணி
ஐந்து கேகய சகோதரர் படைகள் - 1 அக்குரோணி
அஸ்தினாபுரத்துப் படைகள் - 2 அக்குரோணி
இன்றைய வங்காளதேசத்தை தன்னுடைய அசுர பலத்தால் அடக்கி ஆண்ட துரியோதனின் உயிர் நன்பன் மாவீரன் அங்க தேசத்து அரசன் கர்ணன் திரட்டிய படைகள் - 1 அக்குரோணி
சகுனி கௌரவப் கூட்டணி படையணிகளுக்கு போர்த் தந்திரங்கள் சொல்லிக் கொடுத்தான்.
சேர நாட்டு மன்னன் “உதியஞ்சேரல்” கௌரவப்படைகளுக்கு உணவு அளித்தார் என்றும் அதனால் உதியஞ்சேரனனை “பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்" என்று அழைக்கப்பட்டார் என்று பழந்தமிழ் பாடல் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது.
பாண்டவர் தரப்புப் படைகள்
விருஷ்னி வம்சத்துச் சாத்யகியின் படைகள் - 1 அக்குரோணி
நீலனின் மகிசுமதிப் படைகள் - 1 அக்குரோணி
சேதிசு அரசர் திருட்டகேதுவின் படைகள் - 1 அக்குரோணி
சராசந்தனின் மகன் சயத்சேனனின் படைகள் - 1 அக்குரோணி
துருபதனின் படைகள் - 1 அக்குரோணி
மத்சய அரசன் விராடனின் படைகள் - 1 அக்குரோணி
தமிழ் நாட்டு அரசர்களின் படைகள் (சோழரும் ,பாண்டியரும்) - 1 அக்குரோணி.
பாண்டவர்களின் படைகளுக்கு தலைமைப்படைத் தலைவராக திருட்டத்துயும்னன் நியமிக்கப்பட்டான்.
பாண்டவப் படைகளுக்கு போர்த்தந்திரங்கள் சொல்லித் தர ஸ்ரீகிருஷ்ணர் இருந்தார்.
ஆனால் கிருஷ்ணர் இப்போரில் ஆயுதம் ஏந்தி போர் செய்யாமல் அருச்சுனனின் தேரோட்டியாக செயல்பட்டார்
போரில் வெற்றி பெற அரவானை பலி கொடுத்தனர். போர் துவங்குவதற்கு முன், ஒரு அணியிலிருந்து வேறு அணிக்கு மாற விரும்புபவர் மாறலாம் என தருமர் கூற, திருதராட்டினரின் இரண்டாம் மனைவியின் மகன் யுயுத்சு கௌரவர் அணியிலிருந்து, பாண்டவர் அணிக்கு மாறி அவர்கள் சார்பாக போரிட்டான்.
தற்போதைய கணக்குப்படி பாண்டவர்கள் படையில்7 அக்குரோணி
(15,30,900 படைகளும்) கௌரவர் படையில்11 அக்குரோணி
(24,05,700 படைகளும்) இருந்தன.
போரில் நடுநிலை வகித்தவர்கள்
-------------------------------------------------------
ஸ்ரீகிருஷ்ணரின் அண்ணன் பலராமன், கௌரவ மற்றும் பாண்டவர்களின் சித்தப்பா விதுரன், மற்றும் விதர்ப்ப நாட்டு மன்னர் உருக்மி.
போர் முடிவில்
===============
கௌரவர் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், அங்க தேசத்து அரசன் கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர்.
பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர்.
போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள், படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.