Friday 24 June 2016

மனிதன்

சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.!

பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.!

தண்ணீருடன் பக்தி சேரும்போது அது புனித நீராகிவிடும்.!

பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.!

இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.!

பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்.!

செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்.!

வேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகிவிடும்.!

பிரம்மச்சரியத்தோடு பக்தி சேரும் போது அது துறவறம் ஆகின்றது.!

இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!

ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!

மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!

                  மதம் எதுவானாலும்
மனிதன் நல்லவனாக இருக்கவேண்டும்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.