Wednesday 29 June 2016

காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்

காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்

காயத்ரிமந்திரத்தை இந்த பூமிக்கு அறிமுகப்படுத்தியவர் விஸ்வாமித்ரர் ஆவார்.அவர் ஆகாயத்தில் சூட்சும ஒலியாக தியான நிலையிலிருந்து இதனைக் கண்டறிந்தார்.
அவர் ஒரு க்ஷத்திரியர் ஆனால் இன்று மூன்று வேளைகளிலும்(காலை, மதியம், மாலை) சந்தியாவந்தனம் செய்துவரும் பிராமணர்கள் ஜபிப்பது காயத்ரி மந்திரத்தைத் தான்.

ஓம் பூ: புவ: ஸ்வஹ: தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோயோந: ப்ரசோதயாத்

இதுதான் அந்த காயத்ரி மந்திரம்.இதில் : என வந்தால் ஹ என உச்சரிக்கவும்.அதாவது ஓம் பூஹ புவஹ ஸ்வஹஹ, த்யோயோநஹ என உச்சரிக்கவேண்டும்.
இதன் தமிழ் அர்த்தம் என்ன?

‘யார் நம் அறிவாகிய ஒளிச்சுடரைத் தூண்டுகிறாரோ அந்த ஒளிக் கடவுளை நான் வணங்குகிறேன்’
என்பதே இதன் அர்த்தம்.
சூரியனுக்கு உள்ள்ளே காயத்ரி தேவி இந்த காயத்ரிமந்திரத்தின் வடிவமாக ஸ்தூல வடிவமாக அமர்ந்திருக்கிறாள்.அவளுக்கு ஐந்து திருமுகங்கள்!
லட்சுமி, சரசுவதி,பார்வதி,மகேசுவரி,மனோன்மணி என்ற ஐந்து முகங்களும் சிவனின் படைத்தல்,காத்தல்,அழித்தல்,
மறைத்தல்,அருள் செய்தல் ஆகிய தொழில்களை நினைவுபடுத்துகின்றன.

காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபிப்பவர்களின் அனைத்து ஆசைகளும் உறுதியாக நிறைவேறும்.தினமும் காயத்ரி மந்திரம் ஜபிப்பவர்களுக்கு ‘ஆத்மசுத்தி’ கிடைக்கும்.அவர்கள் இவ்வுலகில் வாழும் வரையிலும் அனைத்து சுகங்களையும் அனுபவிப்பார்கள்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.