Monday 27 June 2016

மண்ணும் மனிதனும்*

*மண்ணும் மனிதனும்*

இறைவன் ஆதத்தைப் படைத்து. வானவர்களை நோக்கி அவருக்கு அடிபணியுங்கள் " என்று கட்டளையிட்டான்.  அவர்களும் அவ்வாறே பணிந்தனர் என்று  (குர்ஆன் கூறுகிறது  ' //////////////////////

இது குறியீட்டு நிகழ்ச்சி.   மனிதன் இயற்கைச் சக்திகளையும் அடக்கி ஆள்வான்.   அவையும் அவனுக்கு அடிபணியும் என்பது இதன் பொருள் ------

உலகியல் பொருளில் மண் என்பது அற்பமானது !!!!!!!!!!!

மனிதனை மண்ணால் ஆனவன் என்று கூறுவதன் மூலம்.   மனிதனே!  நீ அற்பமான,   கீழினும் கீழான மண்ணால்  ஆனவன்.  எனவே நான் பெரியவன் என்று அகந்தை கொள்ளாதே ' என்று இறைவன் அறிவுரை கூறுகிறான் என்பது பொருள்...

மண் வாங்கிக் கொள்ளக் கூடியது  (receptive)  அது விதைகளையும் வாங்கிக் கொள்ளும்.  நீரையும் வாங்கிக் கொள்ளும்.  அதனால் அது விளைவிக்கக் கூடியதாய் இருக்கிறது  . *****************

மனிதனும் அறிவுரைகளையும் அறவுரைகளையும் வாங்கிக் கொள்ளக் கூடியவன் எனவே விளைவிக்கக் கூடியவன்  -----

காற்றையோ.  நெருப்பையோ.  நீரையோ மாற்றமுடியாது மண் மாறக் கூடியது  ........!!!!!!!!!!!!!!!!!!

மனிதனும் மாற்றங்கள் அடையக் கூடியவன்.  களிமண் குழைவானது.  அதில்  எந்த வடிவத்தையும் செய்யலாம்????

மனிதனும் குழைவானவன்.  அவனையும் எப்படியும் உருவாக்கலாம்  '''''''''''''''''''''''''''''  ***

சுட்ட மண் பாண்டத்தைப் போல் ஒலி எழுப்பும் களிமண்ணால் அவன் மனிதனைப் படைத்தான்.  (55 . 14 .   *******
என்று குர்ஆன்  கூறுகிறது .....

மண் பாண்டம் குயவனின் சக்கரத்தில்  உருவாகிறது.  சக்கரத்தின் சுழலற்சியும் குயவனின் கரங்களும்  மண் பாண்டத்தை உருவாக்குகின்றன. ..... !!!!!!!!

மனிதன் கால சக்கரத்தின் பரிணாமச் சுழற்சியில் இறைவனின் கரங்களால் உருவாக்கப் பட்டவன்  ??????

இறைவன் தன் இரு கரங்களால் மனிதனைப் படைத்ததாக குர்ஆன் (38.  75. )
கூறுகிறது.       இறைவனுக்கு உருவமில்லை  .  இங்கே கரம் என்பது  குறியீடு  ////////////////

இரு கரம் என்பது முரணான இருவகை  இயற்கைச் சக்திகளைக் குறிக்கும் ??????

அதாவது தீவிரம் சாத்வீகமாகும் ...  !!!!!!!!!!!!!!!!

நாம் மனிதனை மிகச் செம்மையான வடிவில் படைத்திருக்கிறோம் (குர்ஆன் 95. 4 . )  என்று இறைவன் கூறுகிறான்  ***--************

பச்சைக் களிமண் பாத்திரம் உறுதியாக இருப்பதற்காக நெருப்பில் சுடப்படுகிறது  ...

மனிதனும் அவ்வாறே உறுதி  அடைவதற்காகத் துன்பங்களாலும் சோதனைகளாலும்  சுடப்படுகிறான் ..   ::     ::    : :

காலியாக இருக்கும் மண் பாண்டத்திற்குப் பெருமை இல்லை.  அது நிறைந்திருந்தால்தான் பெருமை.   மனிதனும் அவ்வாறே நிறைந்திருக்கும்போதுதான்  பெருமை அடைவான்  ..........

மண் பாண்டம் எதனால் நிறைந்திருக்கிறதோ அதை வைத்தே மதிப்புப் பெறுகிறது.
மனிதனும் எதனால் நிறைந்திருக்கிறானோ அதை வைத்தே மதிக்கப்படுகிறான்.

அறிவாலும் நற்பண்பாலும் நிறைந்திருக்கும் மனிதனை
உலகம் மதிக்கிறது .......!!!!!!!!!

ஆறியாமையாலும் தீய பண்பாலும் நிறைந்திருப்பவனை உலகம் இகழ்கிறது......!!!!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.