Wednesday, 29 June 2016

இசை

இசையும் நடனமும்

இசை – கேட்டவுடன் நம் உடல் மன ரிதத்தை தூண்டி இசைய வைப்பதால் இசை என்றாகியது.

இசையை ஒருவர் கேட்டக்கும் போதும் தன்னிலை மறந்து அதன் நிலையில் நிலை கொள்ள வைப்பதே இசையின் தன்மை.

மென்மையாக இசையாக இருந்தால் மென்மையான அதிர்வுகளை நரம்புகளின் வாயிலாக வருடிக் கொடுத்து நடனமிட செய்யும்.

அதிர்வலைகள் அதிகம் இருப்பின் நரம்புகள் புடைத்து எழுந்து ஆர்பாட்டமான உடல் அசைவுகளை ஏற்படுத்தும்.
முந்தியது ஆற்றலைப் பெருக்கும். பிந்தியது ஆற்றலை குறைக்கும்.

மென்மை தன்மை கொண்ட இசை மேன்மையடைய வலி வகுக்கும். உள்ளத்து உணர்வுகளை அழகுற எடுத்துக்கூறும்.

வீரிய தன்மை கொண்ட இசை ஆழ்மன அதிர்வுகளை தாக்கி உள்ளே தேங்கி இருக்கக்கூடிய அத்தனை பதிவுகளையும் கடைந்தெடுத்து ஆக்ரோஷமாக வெளியில் கொண்டு வரும். இது தான் உடுக்கை, பம்பை போன்ற சத்தம் கேட்டால் உடலில் ஏற்படும் ஆர்பாட்ட அசைவுகள்.

இதைத்தான் நாம் சாமியாடுதல், அல்லது பேய் ஆட்டம் என்று பெயரிட்டு அழைக்கிறோம்.

உண்மையில் சாமியாடுதல் என்றால் என்ன...??? பேய்யாடுதல் என்றால் என்ன....???

இரெண்டும் ஒரே நிலையில் இயங்கும் மாறுபட்ட துருவங்கள்.

எது மாறுபடுகிறது......???

மனதில் எழக்கூடிய எண்ணம் தான் மாருபாடுகிறது.

எந்த ஒரு எண்ணத்தை நமக்கே தெரியாமல் ஆழ்மனதில் பதிவு செய்து வைத்திருக்கிறோமோ அதுவே நம் சுய நினைவை இழக்கும்போது நம்முடைய கட்டுப்பாட்டை மீறி வெளியில் வருகிறது.

நல்ல சொற்களாக வந்தால் அது சாமியாடுதல் என்றும், தேவையின் நிமித்தம் சொற்கள் வந்தால் அது பேயாட்டம் என்று கூறுகிறோம்.

மொத்தத்தில் இசையின் அதிர்வலைகளை நரம்புகள் ஏற்க முடியாத போது உடலில் மாறுதல் ஏற்படுகிறது.

உள்ளே இருக்கும் பதிவுகளை தூண்டி விடுகிறது. அப்படி தூண்டுவதே இசையின் தன்மை.

இங்கும் எண்ணமே முன்னிலை வகிக்கிறது. நல்லதை எண்ணினால், நல்லதே பதிவாகும், நல்லதே வெளிப்படும். தீய எண்ணங்களை எண்ணினால் தீமையே பதிவாகி தீய பதிவுகளே வெளிப்படும்.

சரி, நல்லதும் தீயதும் எவ்வாறு கண்டறிவது.....???

இருப்பது அனைத்தும் நல்லது மட்டுமே. அவரவரின் மனதின் செயல்பாடுகளே நல்லதாகவும், தீயதாகவும் பிரித்துக் காட்டுகிறது.

ஒரே செயல் ஒருவருக்கு நல்லதாக இருக்கிறது. அதே செயல் வேறொருவருக்கு தீயதாக தோன்றுவது மனதின் மாய விளையாட்டு தான்.

ஆக, இசையை கேட்டு, நம் உள்ளிருப்பின் அதிர்வுகளை கவனித்தால் நம் உள்ளார்த்த தன்மை என்னவென்று கண்டுகொள்ள முடியும்.

கேட்டுப்பாரத்து கண்டடைவோம் நம் மனதின் லட்சணங்களை.......!!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.