Sunday, 19 June 2016

''ரிஷிகேஷ்!''

கங்கைக் கரை :
''ரிஷிகேஷ்!''

ரிஷிகேஷ், இந்துக்களின் புனிதமான நகரம்;  தேவபூமி;  பிரபலமான யாத்திரை மையம்!
இமாலய மலைத்தொடர்களுக்கான நுழைவாயிலாகவும் இருக்கிறது. 

பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, மற்றும் யமுனோத்ரி ஆகியவற்றை உள்ளிட்ட  'சார் தாம் யாத்திரை' செல்வதற்கான துவக்கப் புள்ளியாக ரிஷிகேஷ் இருக்கிறது.

கங்கையானவள், இமயமலையை விட்டு இறங்கி   நேரடியாக ரிஷிகேஷ் வருவதால், மாசுபடாத கங்கையாக சாம்பல் நிறத்தில் ஓடிக்கொண்டிருகிறாள்!

பழமையான மற்றும் புதிய சில கோயில்கள் ரிஷிகேஷில் உள்ள கங்கை ஆற்றின் கரைகளில் காணப்படுகின்றன.

சிவாலிக் மலைகளின் பதிமூன்று முக்கிய கடவுள்களுள் ஒன்றான சதி அம்மனுக்காக இங்கு 'குஞ்சாபுரி' என்ற கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது.

பங்கஜா மற்றும் மதுமதி ஆகிய நதிகள் சந்திக்கும் இடத்தில் 'நீல்கந்த் மஹாதேவ் கோவில்' உள்ளது. சிவராத்ரியின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

திரிவேணி மலைக்கு அருகில் அமைந்திருக்கும் ரிஷிகுண்ட் குளத்தின் நீரில் பழபெரும் 'ரகுநாத் கோவிலின்' பிம்பத்தை பக்தர்கள் காணலாம்.

ரிஷிகேஷில் இருந்து 16கிமீ தொலைவில் கங்கை ஆற்றின் கரையில்  சிவபுரி கோவில்  அமைந்திருக்கிறது.  

கங்கை நதி மிக அகலமாக இருக்கிறது.  சில இடங்களில் கங்கைக்கு 1.2 கிலோமீட்டர் அகலம்.    அங்கங்கே பெருசும் சின்னதுமான படித்துறைகள்.

கங்கையின் வளைவு நெளிவுகளூடே இந்தப்படிதுறை  கிட்டத்தட்ட  ரிஷிகேஷம் முழுவதும்  நீண்டுகொண்டே செல்கிறது.

அந்தி சாயும் நேரத்தில் கங்கைக்கு மங்கள ஆரத்தி காண்பிக்கும் நிகழ்ச்சி மிகப்பிரபலம்.
அங்கங்கு தூவப்படும் சம்மங்கிப் பூக்கள் நதியோடு  பயணித்துக்கொண்டிருகிறது.

வெளியில் வெயில்.... ஆனால் கங்கையில் காலை வைத்தால்  'ரத்தம் உறைந்துபோகுமோ' என்று நினைக்கும்  அளவுக்கு குளிர்ச்சி!

இரு கரைகளுக்கும் செல்ல படகு சவாரி இருக்கின்றது.  மற்றும் ராமன் ஜுலா, லக்ஷ்மன் ஜுலா என்று இரண்டு தொட்டில்கள்(பாலங்கள்), இருக்கின்றது.

ரிஷிகேஷில், இந்து புராணங்களின் படி  ராவணனைக் கொன்ற பின்பு ராமன் இங்கு நீராடியதாக நம்பப்படுகிறது. ராமனின் தம்பியான லட்சுமணன் சணல் கயிற்றால் ஆன பாலம் ('லக்ஷ்மண ஜூலா') அமைத்து நதியைக் கடந்ததாகவும் சொல்லப்படுகிறதது.

இந்த இடத்தைப் பற்றிய சுவாரசியமான கதை ஒன்று உள்ளது. கடவுள் ராமர் இந்த இடத்தில்தான் தன்னுடைய தியானம் மற்றும் பிற ஆன்மீகச் சடங்குகளைச் செய்தார் என்பதுடன்....

கங்கையில் ஓடும் தண்ணீர் அவரைத் தொந்தரவு செய்ய லக்ஷ்மன் ஒரு அம்பை எய்து தண்ணீரின் ஓட்டத்தை நிறுத்தினார். அதிலிருந்து இங்கிருக்கும் இந்த நதி ஆச்சரியப்படும்படியாக அமைதியாகவே உள்ளது!

இரவில்கூட உங்களுக்குக் கீழே ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியாமலேயே நீங்கள் பாலத்தை கடந்துசெல்லாம்.

இந்த கயிற்றுப் பாலம் 1889ஆம் ஆண்டில் அதிர்வுதாங்கும் பாலமாக  மரக்கொப்புகளால் கட்டப்பட்ட பாலம்  1924ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிறகு, இது வலுவான தற்போதைய இரும்பினால் அமைந்த தொங்கு பாலமாக மாற்றப்பட்டது.

இன்றும் இந்தப் பாலத்தின் மேற்குக் கரையில் லக்ஷ்மணர் கோயில் உள்ளது, அத்துடன் அதற்கும் அப்பால் கடவுள் ராமருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது.

இதனுடன் அவருடைய மற்ற சகோதரரான பரதனுக்கும்  'கேதர் கண்ட்' டில்  ஒரு கோயில் இருக்கிறது.

'லக்ஷ்மண ஜூலா'விலிருந்து இரண்டு கிலோ மீட்டர் முன்னதாகவே  650 அடி நீளம் உள்ள   'ராம்ஜூலா' பாலம் (சிவானந்தா பாலம் உள்ளது.

"யோகாவின் உலகத் தலைநகரம்" என்று அழைக்கப்படும் ரிஷிகேஷ் நிறைய யோகா மையங்களைக் கொண்டிருக்கிறது.

இந்த நகரம் இந்தியாவின் சாகசத் தலைநகரமாக உருவாகியுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து வரும் பயணிகள் புனித கங்கையில் 'வெள்ளைத் தண்ணீர் படகுப்  பயணத்தையும்',  கயாக்கிங், பாடி சர்ஃபிங், இன்ன பிற விளையாட்டுக்களையும் அனுபவிக்கின்றனர்.

பாரம்பரிய வேதாந்த ஆய்வுகளை பாதுகாக்கவும் மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனமான, 120 வருட பழமைவாய்ந்த கைலாஷ் ஆஷ்ரம பிரம்மவித்யாபீடத்தின் வீடாகவும் ரிஷிகேஷ் இருக்கிறது.

சுவாமி விவேகானந்தர், சுவாமி ராம தீர்த்தா மற்றும் சுவாமி சிவானந்தா போன்ற முக்கியமான ஆளுமைகள் இந்த நிறுவனத்தில் படித்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.