*மாயையும் முக்தியும்*
இந்த இரண்டுக்கும் இடையே
நாம் போராடுகிறோம்.
ஏன்.....???
ஏனெனில்......
நமக்கு உள்ளேயிருந்து ஏதோ ஒரு
குரல் "நான் சுதந்திரன், நான் சுதந்திரன்"
என்று சொல்கிறது......!!
ஆனால் , அந்தச் சுதந்திரத்தை உணா்வதற்கு
வெளிப்படுத்துவதற்கும் முயன்றாலோ
கடக்க முடியாத கஷ்டங்கள் நம்மை எதிா்நோக்கி நிற்கின்றன.......!!!
இந்த கஷ்டங்களை மீறி , உள்ளே இருக்கும் அந்த குரல், "நான் சுதந்திரன்,நான் சுதந்திரன்" என்று ஆணித்தரமாகச்
சொல்லிக் கொண்டேயிருக்கின்றன.......!!!
அந்த குரல் ஒலித்து கொண்டே இருக்கிறது....!!!
ஆம், அந்த குரலின் அழைப்பை ஏற்று தான்
நாம் இங்கே பிறந்திருக்கிறோம்........!!!
நாம் அறிந்தாலும், அறியாவிட்டாலும்
நாம் எல்லோருமே அந்த குரலைப் பின்பற்றி சுதந்திரத்தை நோக்கியே விரைந்து சென்று கொண்டிருக்கிறோம்......!!!
அந்த குரலை அறிந்து, அது என்னவென்று
புரிந்து கொண்ட பிறகு, காட்சி அடியோடு மாறுகிறது.......!!!
மாயையின் கொடூரமான போா்க்களமாக
இருந்த அதே உலகம் நல்லதாக அழகியதாக
மாறிவிடுகிறது.........!!!
அதன் பின் நாம் இயற்கையை சபிப்பதில்லை......!!!
உலகம் கொடியது, எல்லாம் வீண் என்று சொல்லதில்லை.......!!!
அதன்பின் நாம் கதற வேண்டிய அவசியம் இல்லை......!!!
அந்த குரலை புாிந்து கொண்டவுடன்.
இந்த போராட்டம், சண்டை, போட்டி, துன்பம், இன்பம், கொடுமை, அற்ப சந்தோஷங்கள்,
மகிழ்ச்சி இவையெல்லாம் பிரபஞ்சத்தில் ஏன்
இருக்க வேண்டும் என்பதற்கான காரணம்
நமக்கு தெரிந்து விடுகிறது.......!!!
பொருட்களின் இயல்பே அது தான்
என்பது நமக்குத் தெரிகிறது.
பிற்கு என்ன......???
ரிஷிகள் பிரபஞ்சம் முழுவதும் தேடிய இறைவன் நம்முடைய இதயங்களிலேயே இருக்கிறாா்.....!!!
நீங்கள் கேட்ட குரல் சாிதான்.
உங்கள் சுதந்திரமே உங்களது சொந்த இயல்பு.......!!!
மாயை ஒரு போதும் உங்களை கட்டவே இல்லை......!!!
இயற்கை உங்கள் கழுத்தை நொிப்பதாகக் கனவு கண்டு நீங்கள் குழந்தையை போல பயந்தீா்கள்.......!!!
உங்கள் குறிக்கோள் இந்த பயத்திலிருந்து விடுபடுவது தான்.......!!!
இந்த குறிக்கோளை அறிவுபூர்வமாக மட்டுமில்லாமல் , உண்மையிலேயே பாா்த்து, இந்த உலகத்தை உணா்வதை விட நிச்சயமாக அதை நாம் உணர வேண்டும்......!!!
அப்போது தான் நாம் சுதந்திரா்கள் என்பதை
உணா்வோம்........!!!
அப்போது, அப்போது மட்டுமே எல்லா துன்பங்களும் மறையும்........!!!
அப்போது தான், இதயத்திலுள்ள குழப்பங்களெல்லாம் நீங்கி இதயம் அமைதி பெரும்.......!!!
எல்லா கோணல்களும் நேராக்கப்படும்........!!!
பல்வேறு வெளிப்பாடுகள், மனமயக்கம் எல்லாம்
மறையும்........!!!
மாயை இப்போது இருப்பது போல பயங்கர கனவாக இல்லாமல்,அழகு மிகுந்ததாக மாறிவிடும்.......!!!
இந்த பூமி இப்போது உள்ளதை போல் சிறைச்சாலையாக இல்லாமல் விளையாட்டு மைதானமாக மாறிவிடும்.......!!!
அபாயங்கள், துன்பங்கள், கஷ்டங்கள் எல்லாம் தெய்வீகமாகித் தங்கள் உண்மை இயல்பை நமக்கு காட்டும்........!!!
எல்லாவற்றின் உள்ளும் புறமுமாக நிற்பது
ஒரே உண்மைப் பரம்பொருள் தான்
என்பதை அப்போது தான் நாம் உணா்வோம்.......!!!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.