Tuesday 21 June 2016

எளிதான தர்மங்கள்

மஹா பெரியவா சொன்ன
எளிதான தர்மங்கள் - 3

குழந்தைகள்:

இப்போ… நம்ம மதத்துலயும், வெள்ளைக்காராளை மாதிரி… பர்த்டேக்கு பாடிண்டு, candle ஏத்தி அத… வாயால ஊதி அணைக்கற அவலம்.. எல்லா எடங்கள்லயும் நடக்கறது. உண்மைல… அப்டி வெளக்கை ஊதி அணைக்கறது… ஆகவே ஆகாது! அபஸகுனம்! ஶுபமான ஆரம்பத்துக்கு எல்லாருமே வெளக்கை ஏத்தணும்-ங்கறதுதான் நல்லது. கொழந்தையோட பர்த்டேன்னா… நமக்கு ஜன்ம நக்ஷத்ரம்தான் முக்யம். அதுனால, அன்னிக்கி….கொழந்தைகளைக் கட்டாயம் கோவிலுக்குக் கூட்டிண்டு போயி, ஸ்வாமி பேர்ல அர்ச்சனை பண்ணணும்.

இது மாதிரி விஸேஷ நாட்கள்ள, வேத பாடஶாலைக்கோ, ஏழை எளியவர்களுக்கோ, தங்களால முடிஞ்ச அளவு செலவழிச்சு, நல்ல ஸாப்பாடா போடலாம். ஶ்ரீமடத்துக்கு பணம் அனுப்பலாம். பஶுக்களுக்கு வைக்கோல், பில்லு, புண்ணாக்கு வாங்கப் பண ஒதவி செய்யலாம். கொழந்தைகள் கையாலேயே… இந்தப் புண்ணிய கார்யங்களைப் பண்ணச் சொல்லலாம். தர்மத்தை செய்ய கொழந்தேளுக்கு நாம பழக்கித் தரதை விட, பெரிய ஸொத்து, ஒழுக்கம் எதுவுமே இல்ல!

கொழந்தைகளுக்கு… ஸ்கூல்லயும், வீட்லயும் நல்ல பண்புகளையும், நல்ல வழிகளையும் புகட்டி, அதுகளோட மனஸ்ல பதிய வைக்கணும். ஸத்யத்தை பேசறது, யாராகயிருந்தாலும் மர்யாதையோட பழகறது, மத்தவாளைப் பத்தி இல்லாத-பொல்லாத வம்புகளை பேசாம இருக்கறது, அன்பு, ஸகிப்புத்தன்மை, விட்டுக் கொடுக்கற பண்பு, எந்த விஷயத்தையும் நன்னா புரிஞ்சிண்டு செய்யறது…. இதெல்லாம் இருந்தாலே போறும்.

கொழந்தைகளுக்கு…காலேல ஸீக்ரமா எழுந்துக்கப்  பழக்கணும். அதுக்கு வீட்ல இருக்கற பெரியவர்களும் ஸீக்ரமா எழுந்துக்கணும்!

அது ஒடம்புக்கும் ரொம்ப நல்லது.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

மாலை வணக்கம் நண்பர்களே !!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.