மாங்கல்ய தோஷம்

மாங்கல்ய தோஷம், பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். மனிதப் பிறவி எடுப்பதே, இல்லற வாழ்வில் ஈடுபட்டு, நல்லறம் செய்து, சந்ததிகளை உருவாக்குவதற்கே. சில கிரகங்களின் சேர;க்கை, கோச்சாரநிலை, தசா, புத்திகள் போன்ற காரணிகளால், திருமணம் தாமதமாகும் அல்லது தடை உண்டாகும். பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்க தடையாக இருக்கும் கிரக அமைப்புகளைத்தான் மாங்கல்ய தோஷம் என்கிறோம். சென்ற பிறவிகளில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையிலேயே, இந்தப் பிறவியில் நமது ஜாதகக் கட்டங்கள் அமைகின்றன.
பரிகாரங்கள் :
✫ வன்னி மரத்தடியில் அமர;ந்துள்ள விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களன்று வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னி பெண்களுக்கு வஸ்திரதானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும்.
✫ செவ்வாய்க்கிழமை தோறும் முருக வழிபாட்டை விரதத்தோடு செய்ய வேண்டும். அல்லது சஷ்டி அன்று விரதமிருந்து வழிபடலாம்.

ஊடiஉம ர்நசந வழ னுழறடெழயன கசநந வுயஅடை ளுவழசல யுpp
✫ வசதி இருந்தால், தங்கத்தில் தாலி அணிய வசதி இல்லாத பெண்ணுக்கு மாங்கல்யம் வாங்கி தானம் கொடுக்கலாம்.
✫ வயதான சுமங்கலி பெண்களுக்கு முருகன் சன்னதியில் வைத்து மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்குடன் தட்சணை கொடுத்து உதவினால் தோஷம் நிவர;த்தியாகும்.
✫ எந்த கிரகத்தால் மாங்கல்ய தோஷம் ஏற்பட்டிருக்கிறதோ அந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்தால் தோஷம் நீங்கும்.
✫ மாங்கல்ய தோஷம், திருமணத் தடங்கல் இருப்பவர;கள் ஆலய விருட்சத்தில் மஞ்சள் தாலியைக் கட்டினால் தோஷம் நீங்கும், திருமணத் தடங்கல் விலகும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.