சாகாக் கால்.
''''''''""""""""""""""""". வாசியை சாகாத கால் என்று சொல்லுவார்கள்.
''நாசிக்கு வெளியே சுவாசம் ஓடுகிற மனிதனை நம்புவது எம்மாத்திரம் ""
பைபிள்.
நாசிக்கு வெளியே ஓடாமல் உள்ளடங்கும் வாசி குறைந்து கொண்டே வந்து ஓரிடத்தில் வாங்கிய வாசி வெளியேறாமல் சுழல சாகாது அதையே ஞானிகள் சாகாத கால் என்றும்.
நினைவு மனமாக புற இன்பம் தேடாமல் ஐம்புலன் அடக்கம் உள்ள இடம் . உடல் விழுந்து விடும் நாளில் உயிர் போய் விட்டது என்கிறோம். உயிர் உறையும் இடம் வேகாத்தலை என்றும் கூறுகின்றனர் ஞானியர்.
முதுகுத் தண்டில் ஏழு நிலை என்கிறார்கள். கோவிலில் சீவனான சிவனுக்கு மேலே வெட்ட வெளியில் ஏழு நிலை மாடம் உள்ளதே.
எருக்கிடக்கும் வாசலுக்கு இரு விரல் மேலே என்றவுடன் மலத்துவாரத்துக்கு மேலே இடுப்பில் காட்டி விட்டது கற்ற அறிவு.
எரு என்பது உரம் இல்லையா? இந்த உடலின் உரம் எது? இந்திரீயம் இல்லையா. கிடந்த நிலை என்பது சயனம்.
இந்திரீயம் ஓரிடத்தில் கிடக்கிறது. பின்பு அமர்ந்த கோலம் அது ஓரிடத்தில் திரள்வது.. நின்றது திருக்கோலம் உருகாமல் நின்று போனது.
கருக்கிடக்கும் வாசல் யோனியா? எவ்வளவு தாழ்ந்த சிந்தனை. கரு போய் உடலில் அமர்ந்த இடம்.
இது இரண்டையும் ஞானியாகிய அனுமதி உள்ள குருவே கூற வல்லவர்.
பணம் வாங்கி எந்த உபதேசம் செய்தாலும் அது பாவமே. அவரவர் செய்ய வேண்டிய தர்மம் இது.
பெற்ற தாய் அதுவே .அதை காசுக்காக விற்றடிமை கொள்வதா.
''சித்து இல்லாத போது சீவன் இல்லை இல்லை இல்லை இல்லையே. ""எவ்வளவு அழுத்தமாக கூறுகிறார் பாருங்கள்.
உங்களிடம் இறைத் தன்மையாகிய தர்மம் இல்லாது நீங்கள் செய்கின்ற உபதேசத்திற்கு உயிரில்லை.
மூச்சை ''ஏங்கினதை அடி விடாதே ""என்று கூறியுள்ளார்.
வாசி யோகம் என்று மூச்சை உடலுக்குள் இழுக்க சொல்கிறார்களே தொண்டைக்கு கீழே நரகம். சிரசே பதி.
மனம் நாம் பெற்ற அறிவற்ற குழந்தை அதை எப்படி குரு என்று சொல்வது. அகத்தீயே ஆன்மாவே குரு ஈசன் அம்சம்.
'' ஈசானை ஆசானாய்க் காணும் பேர்க்கிங் கின்பமுடன் கைலாசம் எய்தலாமே. ""
எண் சாண் உடலில் '' சி""அரசே பிரதானம். அருட்பெருஞ்ஜோதி.
உண்மையான குருவிடம் தீட்சை பெற்றோமா எனச் சரிபார்க்க அகத்தியர் சூத்திரம்.
முந்தி வருங் கணபதியும் பிறந்த தெங்கே
முக்கோண முனை எங்கே அடிதானெங்கே
நற்கமலம் ஆயிரத்தெட்டு இதழும் எங்கே
நல்ல சங்கு நதி எங்கே வைகுந்தம் எங்கே
நாரணனும் ஆலிலை மேல் படுத்த தெங்கே
அல்லற் படுத்தும் ஐம்பூத ஒடுக்கம் எங்கே
ஆறு ஐந்து இதழ் இரண்டு முளைத்த தெங்கே
இந்த வகை பொருள் அறிந்து சொல்வார் தம்மை இறைவன் என்றே கருதி இயம்பலாமே.
சற்குருவும் சன்னதியும் ஆனதெங்கே
சாகாத கால் எங்கே வேகாத் தலையுமெங்கே. ....
நடு நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில் இது எல்லாம் உள்ளதா?
கற்ற அறிவு இல்லை ஞானம். அறிவை அதன் இடம் தேடி அறிவால் அறிவது.
தன்னைத் தானே அறியும்.!!!
Tuesday, 28 June 2016
சாகாக் கால்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.