Tuesday 21 June 2016

தொங்கும் தூண

தொங்கும் தூண் .தமிழகத்தில் தருமபுரி நகரின் அதிசயப்பெருமை.கொற்றவை" சூலினி" ராஜ துர்க்காம்பிகை நிகழ்த்திய நாம் இன்றளவும் நேரில் காணும் தமிழ் வரலாற்று சான்று. என்றாவது ஒருநாள் ,ஒருவேளை சில மணித் துளிகள் வாழ்நாளில் வாய்க்கக்கூடும். எவருக்கும் அதுபோன்றதொரு தருணம் !கண்ணால் காணும் காட்சியும் நாம் பெற்ற அறிவும் போரிட்டு இது உண்மையா? பொய்யா ?நம்புவதா? வேண்டாமா ?இப்படி நடக்க சாத்தியம் உள்ளதா ?என மனமும் புத்தியும் திகைத்து கிடக்கும் நிலையை அனுபவித்திருக்கிறீர்களா ?
நாம் அறிந்த பௌதீக விதிகளின் படி .,பூமியின் ஈர்ப்பு விசையின் படி எந்த பொருளும் தரையை நோக்கி விழுவது தானே இயல்பு .எடை மிகுந்த எந்த பொருளும் பூமியில் தானே ஊன்றி இருக்க வேண்டும் .தருமபுரி  கோட்டை கோவிலில் உள்ள கிட்டத்தட்ட ஆயிரம் கிலோவிற்கும் மேல் எடை கொண்ட அந்த தூண் தரையில் ஊன்றவில்லை. சொல்லப்பட்ட தகவலை உறுதி செய்ய ஒரு மெல்லிய துணியை இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கம் இழுத்தும் பார்த்தாயிற்று .ஆச்சர்யம் அடங்கவில்லை .இது எப்படி சாத்தியம் .பொறியியல் விதிகளுக்கு அப்பாற்பட்டும் கட்டிடக்கலையின் உன்னதத்தை தொட்ட கலைஞர்களை எப்படி கொண்டாடுவது . .

''ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர் ''

என்று ராஜராஜரின் மெய்க்கீர்த்தியில் சொல்லப்படும் நுளம்பபாடியின் மைந்தர்களான நுளம்பர்களின் கைவண்ணம் இது .நுளம்பர்களின் கலைத்திறனை கண்டு ரசித்ததோடு வந்தவர் இராஜராஜர் .அதனை கைப்பற்றி கொண்டு வந்தவர் ராஜேந்திரர் .அவைகளை பற்றி இந்த ஆச்சர்யம் அடங்கி மனம் நிதானமானபின் இன்னொரு பதிவில் .

நன்றி- பராந்தக சோழன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.