Friday 24 June 2016

நாத்திகன்

யாருக்கு தன்னிடம் நம்பிக்கையில்லையோ அவனே நாத்திகன்

உன்னால் சாதிக்க முடியாத காரியம் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே அப்படி நினைத்தால் ஆன்மீகத்திற்கு அது முற்றிலும் முரண்பட்டது

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவனாக நீ நினைத்தால் நீ வலிமை படைத்தவனாக மாறுவாய்

நீங்கள் கடவுளின் குழந்தைகள் அழியா பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் பெற்றவர்கள்.

பலவீனத்தின் பரிகாரம் ஒயாமல் பலவீனத்தை பற்றி சிந்திப்பது அல்ல அதற்குமாறாக வலிமையை குறித்து சிந்திப்பது.

மிக பெரிய உண்மை இது, பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.

நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல், நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.

மனிதனே மேலானவன் எல்ல மிருகங்களைவிடவும் எல்லா தேவர்களைவிடவும் உயர்ந்தவன். மனிதனைவிட மேலானவர்கள் யாரும் இல்லை

என்றைக்கு ஆன்மீகம் தனது செல்வாக்கை இழந்து, உலகாயதம் தலையெடுக்க ஆரம்பிக்கிறதோ, அன்று முதல் அந்த சமுதாயத்திற்கு அழிவு ஆரம்பித்துவிடுகிறது.

தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால் தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்.

உனக்கு தேவையான எல்ல வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

உயர்ந்த லட்சியம் உள்ளவன் 1000 தவறுகள் செய்தால், லட்சியம் இல்லாதவன் 50000 தவறுகள் செய்வான் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.

தூயமை, பொருமை மற்றும் விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக அன்பு நிச்சயம் வேண்டும்.

ஒவ்வோரு உயிரிலும் தெயவீகத் தன்மை மறைந்திருக்கிறது. வெளியேயும், உள்ளேயும் இருக்கும் இயற்கையைக் கட்டுப்படுத்தி, உள்ளே குடி கொண்டுள்ளன. இந்தத் தெயவீகத்தன்மையை மலரும்படி செய்வதுதான் முடிவானலட்சியம்.

             - சுவாமி விவேகானந்தர்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.